இலவச மின்சாரம்.. ரூ.519 கோடியா? தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போட்ட உத்தரவு.. என்னாச்சு
சென்னை: தமிழகத்துக்கு சமீபத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அதை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.. இந்நிலையில். தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது என்ன?
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது, கடந்த 2020, ஆகஸ்ட் 5ம் தேதியன்று திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதில், விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்த திருத்தம் பொருந்தும் என்று அறிவித்திருந்தது.

விண்ணப்பம்: இதன்காரணமாக, 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசு இதனை மாற்றி அறிவித்தது. "2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தாலும் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும்" என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அறிவிப்புகள்: அதுமட்டுமல்ல, 2023 -24ம் நிதியாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்ததுடன், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை முதல்வர் ஸ்டாலினும் இதனை துவக்கி வைத்திருந்தார்... இப்போது கிட்டத்தட்ட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்பினை தமிழக அரசு தந்துள்ளது.
அந்தவகையில், விவசாயிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது..
ஆணையம் உத்தரவு: இந்த நிதியாண்டுக்கு ரூ.15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதில், வீடுகளுக்கு மானியம் ரூ.7,225 கோடியும், விவசாய மானியம் ரூ.6,780 கோடியாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், மின்கட்டண உயர்வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய: மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.. கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்துப் பிரிவுகளுக்கும் மின்கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், ஒரு யூனிட்டுக்கு 20 முதல் 55 காசு வரை கட்டண உயர்வால், மானிய செலவும் உயர்ந்தது.. இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கு கூடுதலாக ரூ.519.25 கோடியை மின்வாரியத்துக்கு வழங்குமாறு அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அறிக்கை தாக்கல்: இதனிடையே, தமிழகத்தில் விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மின்துறைக்கு இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது... விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. மின்சார வாரியம் தாக்கல் செய்யும் அறிக்கையை வைத்து, அடுத்தகட்ட நடh வடிக்கை இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications