Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச மின்சாரம்.. அதை விடுங்க.. புதிய மின் இணைப்புகள்.. இதென்ன நம்பர் வருதாமே? மின்சார வாரியம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக மின் இணைப்பு பெறுபவர்கள் பலர் காத்திருக்க, தமிழக மின்வாரியம் முக்கிய அறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது..

கடந்த ஆகஸ்ட் 5, 2020-ல், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. எனவே, ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்த திருத்தம் பொருந்தும் என்று அறிவித்திருந்தது.

Free Electricity and Tamil Nadu Government Major Arrangements about New Electricity Connection

ஏமாற்றம்: இந்த அறிவிப்பினால், 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், திடீர் சர்ப்ரைஸ் ஒன்றை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதாவது, புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும் என்றும் தமிழக மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இது விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

விவசாயிகள்: விவசாயிகள் என்றில்லை.. ஒட்டுமொத்த பொதுமக்களின் நன்மைக்காகவும், பல்வேறு அதிரடிகளை மின்வாரியம் முன்னெடுத்து வருகிறது.. குறிப்பாக, கரண்ட் கனெக்‌ஷன் புதிதாக வேண்டுமானால், அதற்கான வசதிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகின்றன..

வழக்கமாக, புதிய இணைப்பை பெற வேண்டுமானால், கஸ்டமர்களுக்கு கால அளவு 30 நாட்களாக இருந்தது.. பிறகு, விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்து, சில மாற்றங்களும், திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன.

புதிய மின் இணைப்பு: அதன்படி, மின் இணைப்பு பெற வேண்டுமானால், மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை பிரிவு அலுவலகத்தினர் பரிசீலித்து இணைப்பு வழங்குவார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட வேண்டுமானால் 30 நாட்களும், கரண்ட் கம்பம் நிறுவுவதற்கு 60 நாட்களும், டிரான்ஸ்பார்மர் நிறுவுவதற்கு 90 நாட்களும் கால அவகாசம் உள்ளது.

முறைகேடுகள்: அதேபோல, அதாவது, வீடு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பித்த, 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மீட்டர் பொருத்தப்படாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பையும் வழங்கக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, வீடுகளில் மின் கணக்கீடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் கிளம்பியதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையும் முன்னிலைப்படுத்தி வருகிறது.. தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர்கள்: மேலும், மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் போன்றவற்றின் சாதனங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுவதால், முறைகேடுகள் எதுவும் அதில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, மீட்டர்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இப்படி ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பிரத்யே நம்பர்கள் வழங்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. அதாவது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது. இதனால், மின் பயனர்களுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் உடனடியாக எஸ்எம்எஸ் வாயிலாக தெரிந்து கொள்வதுடன், மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு: ஒருவேளை, இந்த மின் இணைப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது தொடர்பான புகார்களையும் தெரிவிக்கும்விதமாக, பிரத்யேக எண்கள் வழங்கப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.. அதுமட்டுமல்ல, மின் இணைப்பு மற்றும் மீட்டர் மின் கம்பங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை என்றாலும், புகார் அளிப்பதற்கு பொதுமக்களுக்கு வசதியாக, புதிய எண்களை வழங்கவும் முடிவு செய்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+