இலவச வீட்டு மனை பட்டா..சென்னை ஹைகோர்ட் அதிரடி.. திருவள்ளூர் மாவட்டத்தில் என்ன நடந்தது? யாரந்த பாட்டி
சென்னை: வயதை காட்டி மூன்றாம் நபர்கள் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளதால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க...கோரிய, 80 வயது மூதாட்டியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது....
வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல, புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
ஆதி திராவிடர்: இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது.
கருணாநிதி: இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த அரசு முடிவெடுத்து, அதை நடத்தியும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இலவச வீட்டு மனை குறித்த வழக்கு ஒன்று பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், அம்மனம்பாக்கத்தை சேர்ந்தவர் சொக்கம்மாள்.. இவருக்கு 80 வயதாகிறது.
இவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். ஆனால், ஒருத்தரும் இவரை கவனிக்கவில்லை.. வசிப்பதற்கு வீடும் இல்லை.. அதனால், இலவச வீட்டுமனை பட்டாவை கோரியிருந்தார்.. எனினும், இவரது மனுவை, திருவள்ளூர் தாசில்தார் நிராகரித்துவிட்டார்.. இதனால் அதிர்ந்து போன சொக்கம்மாள், இதை எதிர்த்து, ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசுக்கு உத்தரவிடவும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு இதுதான்:

தீர்ப்பு தந்த நீதிபதி: "நீர் நிலையை சிலர் ஆக்கிரமித்து வசித்துள்ளனர்... அவர்களுடன் மனுதாரர் வசிக்கவில்லை.. உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு, அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன், அதே நீர் நிலையில் மனுதாரர் கூரை அமைத்துள்ளார். ஆனால், அதில், அவர் வசிக்கவில்லை.
வாரிசுகள் கவனிக்கவில்லை என்றால், பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் கேட்டு, உரிய அதிகாரிகளுக்கு மனுதாரர் விண்ணப்பிக்கலாம். வாரிசுகளிடம் இருந்து உதவி பெற விரும்பவில்லை என்றால், அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளபடி, முதியோர் இல்லத்தில் தங்கலாம்....
தள்ளுபடி: தகுதியுள்ளவர்களுக்கு தான், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கி, இலவச வீட்டுமனை பட்டா பெற, சிலர் முயற்சிக்கின்றனர். இந்த மனுதாரருக்கு, 80 வயது ஆகிறது. இவரது வயதை வைத்து, மூன்றாம் நபர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், வாரிசுகளுடன் இவர் இல்லை. அதனால், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததில் தவறு இல்லை.. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications