அரசு பஸ் சர்ச்சை.. தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு பரபரப்பு மனு
சென்னை: தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் அரசு பஸ்களில் போலீசார் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் காவலர் ஆறுமுகபாண்டியன் பயணித்தார்.. அப்போது அவருக்கும் குறிப்பிட்ட அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாரண்ட் இருந்தால் மட்டுமே அரசு பேருந்தில் இலவசமாக காவலர்கள் பயணிக்க முடியும் என்றும் மற்ற சமயங்களில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை பரிந்துரை செய்தது.

இதனிடையே காவலர் ஆறுமுகபாண்டியன் டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ, தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை காவலர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என சில வருடம் முன்பு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினை சுட்டிக்காட்டி பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மறுபக்கம் பொதுமக்களில் சிலரோ, மற்றவர்களை போல் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பில் மனு ஒன்று அறிவிக்கப்ட்டது
தமிழக காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு, கடந்த 13.9.2021 அன்று முதல்வரால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இலவச பயணம் மேற்கொள்ள நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழலில், அடிக்கடி இலவச பயணம் தொடர்பாக காவலர்களுக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்யும் சாதாரண பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.காவலர்கள் தங்கள் பணி நிமித்தமாக அடிக்கடி அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்து வரும் நிலையில், அதிக தூர பயணங்களுக்கு பஸ் வாரண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உள்ளூர் பயணம் மூலமாகத்தான், தினசரி பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
உள்ளூர் பயணத்தில் பஸ் வாரண்டுகளை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் காவலர்களுக்கான இலவச பஸ் பயணத்தை அனுமதிப்பது குறித்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். பணி நிமித்தமாக பஸ்சில் பயணம் செய்த நெல்லை மாவட்ட காவலர் ஆறுமுகபாண்டியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications