காலையில் வாக்கிங் வராமல் தூங்கிய நண்பன்.. பேண்டு, டிரம்பெட் வாத்தியங்களுடன் சென்று எழுப்பி சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை நடைபயிற்சிக்கு வராமல் தூங்கியவரின் வீட்டிற்கு, பேண்டு, டிரம்பெட் வாத்தியங்களுடன் சென்று நண்பர்கள் எழுப்பி விட்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

நடைபயிற்சி என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான விஷயமாக மாறிவிட்டது.உடல் உழைப்பு இல்லாத தொழிலில் இன்றைய தலைமுறையினர் இருப்பதால் காலை அல்லது மாலை உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

Friend not coming for morning walk: morning walk friends decided to go home with band baza

சென்னை, கோவை, மதுரை , திருச்சி போன்ற நகர்புறங்களில் வாக்கிங்கிற்கு என்றே பிரத்யேமான பூங்காங்கள் உள்ளன. தினமும் 40 நிமிடமாவது நடைபயிற்சி கொள்வதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பலர், தினமும் 10 ஆயிரம் அடி என்ற இலக்குடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

தினமும் 10 ஆயிரம் அடி நடக்கிறார்களா என்பதை கண்காணிக்க பல்வேறு ஆப்களும் உள்ளன. அந்த ஆப்பை ஆன் செய்து விட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம். நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், நண்பர்களுடன் கலந்து பேசிமகிழும் பயிற்சியாகவும் உள்ளதால், பலர் என்ன வேலையில் இருந்தாலும் நடைபயிற்சியை தவறவிடுவது இல்லை. நடைபயிற்சி மேற்கொள்வோர் நட்பு வளர்த்து சங்கம் ஆரம்பித்து செயல்படுவதும் உண்டு. நடைபயிற்சி பற்றி பேசும் போது, சுவாரஸ்யமான ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. அதை பற்றி பார்ப்போம். எந்த ஊர் என்று தெரியவில்லை..

Friend not coming for morning walk: morning walk friends decided to go home with band baza

காலை நடைபயிற்சிக்கு வருபவர் நடுத்தர வயதுடையவர்கள் தன் நண்பரை அழைத்துள்ளார்கள். ஆனால் நண்பரோ நடைபயிற்சிக்கு வராமல் தூங்கிவிட்டார். இதனால் நடைபயிற்சிக்கு சென்ற நண்பர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், தன் நண்பருக்கு வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தார்கள். இதன்படி காலை நடைபயிற்சிக்கு வராமல் தூங்கியவரின் வீட்டிற்கு, பேண்டு, டிரம்பெட் வாத்தியங்களுடன் சென்று நண்பரை எழுப்பி விட்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவர்களது நட்பை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள். இப்படி நண்பர்கள் கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்கவேண்டும்என்று கூறியுள்ளார். பலரும் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டி உள்ளனர். இந்த மாதிரி ஒரு நட்பு வட்டம் இருந்தா போதும் வேற எதுவுமே தேவைப்படாது நம்ம வாழ்க்கையில்.. என்று இதயப்பூர்வமாகவும் நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகிறார்கள். உண்மை தான்..அதேநேரம் எலைட் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என்றும் அதனால் தான் இப்படி அவர்கள் செய்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+