தங்கம் vs கார்..1980ல் விலையும்.. இன்றைய மதிப்பும்! ஒரு கார் வாங்குன காசில் தங்கம் வாங்கியிருந்தால்?
சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போதைய சூழலில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை தாண்டி இருக்கிறது. கடந்த காலங்களில் தங்கத்தின் விலை மிகக் குறைந்த அளவே இருந்த நிலையில் தற்போது உச்சத்தை தொட்டு வருவது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் 1980 கால கட்டங்களில் கார், தங்கத்தின் விலை, தற்போதைய சூழலில் கார் தங்கத்தின் விலை குறித்த ஒரு சிறு கணக்கை பார்க்கலாம்.
தமிழகத்தில் திருமணம், சேமிப்பு, முதலீடு என எதற்கும் முதன்மைத் தேர்வாக இருப்பது தங்கமே. "தங்கம் வாங்கினால் பங்கம் இல்லை" என்று சொல்ல காரணமே, அதன் விலை வருடா வருடம் தொடர்ந்து உயர்ந்து வருவது தான்.
இன்றைய சூழலில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆனால், 1980களில் அந்த விலை எவ்வளவு தெரியுமா? 1980களின் தொடக்கத்தில் இந்தியாவில் 10 கிராம் தங்கம் சுமார் 1,800 முதல் 2,200 ரூபாய் மட்டுமே.

தங்கம் விலை
அதாவது, ஒரு கிராம் தங்கம் 180 முதல் 220 ரூபாய் தான். இன்று அது 10,000 ரூபாய் என்பதால், சுமார் 45 மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அன்று ஆடம்பரமாக பார்க்கப்பட்ட கார் இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. இன்று கார்கள் இல்லாத நகரத்து வீடுகளே இல்லை என சொல்லிவிடலாம். அதே நேரத்தில் அப்போது ஒரு கார் விலை எவ்வளவு தெரியுமா? 1980களில் இந்திய சாலைகளில் அதிகமாக ஓடியது ஹிந்துஸ்தான் அம்பாசிடர் மற்றும் பிறகு மாருதி 800 தான்.
கார் விலை
1983ல் வெளியான மாருதி 800 காரின் விலை சுமார் 45,000 ரூபாய், அம்பாசிடர் காரின் விலை 1980களில் சுமார் 60,000 முதல் 70,000 ரூபாய். தற்போது ஒரு மாருதி 800 போன்ற entry-level காரை வாங்கினாலும் குறைந்தபட்சம் 3.5 முதல் 4 லட்சம் ரூபாய் செலவாகும். அப்போது மருதி போல், இப்போது இருக்கும் அதே அளவிலான புதிய சிறிய வகை கார்கள், உதாரணமாக அல்டோ கே10 போன்றவை, 4 முதல் 5 லட்சம் ரூபாய் விலைக்கு கிடைக்கின்றன.
1980களில் தங்கம் விலை
அதாவது, 1983-இல் 45,000 ரூபாய் செலவில் வாங்கிய மாருதி 800 கார்.இன்று இருந்தால் அதிகபட்சம் பழைய விண்டேஜ் வாகனமாக 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே மதிப்பாக இருக்கும். ஆனால் அந்த 45,000 ரூபாய்க்கு அப்போது தங்கம் வாங்கியிருந்தால்? இப்போது என்ன மதிப்பு என்ன தெரியுமா? 1983-இல் தங்கம் கிராம் ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. அதாவது மருது 800 கார் வாங்கிய 45,000 ரூபாய்க்கு சுமார் 225 கிராம் தங்கம் வாங்க முடியும். இன்று அந்த 225 கிராம் தங்கத்தின் மதிப்பு என்றால், 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ( 225 × 10,000) என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மதிப்பு உயர்வு
அதாவது, அப்போது கார் வாங்கியவர்கள் இன்று பழைய வாகனத்தின் நினைவுகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள். ஆனால் தங்கம் வாங்கியிருந்தால், இன்று 22 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை வைத்திருப்பார்கள். இந்த கணக்கு ஒரு விஷயத்தை தெளிவாக காட்டுகிறது, கார், மின்னணு சாதனங்கள் போன்றவை காலத்தால் மதிப்பு குறையும். ஆனால் தங்கத்தின் விலை மட்டும் தலைமுறை தலைமுறையாக உயர்ந்துக் கொண்டே செல்கிறது. அதனால் தான் கார், வீடு, பொருள் வாங்கலாம்.. ஆனால் தங்கத்தை சேமித்தால் அது உங்களையும் உங்கள் சந்ததிகளையும் சேர்த்து காப்பாற்றும்.












Click it and Unblock the Notifications