ரிலாக்ஸ்.. 2011 முதல் இதுவரை.. நடிகையின் பலாத்கார புகார் விவகாரத்தில் சீமான் அடித்த அந்தர் பல்டிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பலாத்கார புகார் தெரிவித்திருந்தார். 2011-ம் ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து இழுபறியாக நீடித்து வரும் வழக்கில்தான் எத்தனை எத்தனை வகையான பதில்களை சீமான் தெரிவித்துள்ளார். 2011, 2023, 2025-ம் ஆண்டுகளில் நடிகை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போதெல்லாம் சீமான் தெரிவித்த சில கருத்துகளின் தொகுப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
வறுமையில் உதவி கேட்டு வந்த நடிகை
2011-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி சீமான் அளித்த பேட்டி: நடிகை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார். நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும்.

என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று கூட ஒருமுறை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. இதை எனது நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன். நடிகை மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். வேண்டாம் என்றும், நடிகையைக் கண்டிப்பதாகவும் சேரன் கூறினார். அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். திமுக, காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்போது நடிகையை தூண்டி விட்டுள்ளனர். நடிகை கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள பலாத்கார வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்போம்.
ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்...
2011-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் சீமான். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றது. நடிகை தன்மீது கொடுத்துள்ள புகார் குறித்த விசாரணையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.

மானங்கெட்ட ஒருத்தியோடு சண்டை போடனுமா?
2023-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி சீமான் அளித்த பேட்டி: மானங்கெட்ட ஒருத்தியோடு நானும் சரிக்கு சரி நின்று சண்டை போடனும் என சொல்றீங்களா? நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்கிறேன்.. அவங்க என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க? பத்திரிகையாளர்கள் இதை எல்லாம் என்கிட்ட கேட்கவே கூடாது. நான் நடிகை விவகாரத்தை பேசுவதையே ரொம்ப நாளா...... அருவெறுப்பா நினைக்கிறேன். அதனால அமைதியாவே இருந்தேன். என்னுடைய அமைதியால் அவங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்புற மாதிரி வந்துடுது.. அதனால பேச வேண்டியதிருக்கு.
10 லட்சுமிகளை அனுப்புங்க
2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் சீமான் அளித்த பேட்டி: சும்மா.. முதல்ல அந்த பொம்பளை யாரு? ஏன் இந்த நடிகை, வீரலட்சுமின்னு அனுப்பி கிட்டு இருக்க? எனக்கு பிறப்புல, ரத்தத்துல வீரம் இருக்கு. நான் ஏற்றுக் கொண்ட தலைவன், வீரமே உருவமாக இருந்தவன். அவரோட மகன் நான். எனக்கு வீரம் எல்லாம் இருக்கு. வேண்டாம்.. இரண்டு லட்சுமியும் திரும்ப போயிடுங்க.. என்கிட்ட இல்லாதது பணம்தான். எனக்கு தன லட்சுமியும் தைரிய லட்சுமியும் அனுப்பிவிடு.. 10 கூட அனுப்பு.. சமாளிக்கிறேன். 10 தனலட்சுமி, 10 தைரிய லட்சுமியை அனுப்பிடுங்க.. சும்மா ஏதாவது பூச்சாண்டி காட்டிகிட்டு..
நான் கேடு கெட்ட ரவுடிப்பய..
ஒரு யூடியூப்ல அவன் என்கிறாய். இவன் என்கிறாய்.. நான் ஜனநாயக வாதியாக இருப்பது தான் உங்களுக்கு பிரச்சனை.. இந்த முகத்தையே பார்க்க முடியலையே.. எனக்கு வேற முகம் இருக்கு.. நான் கேடு கெட்ட ரவுடிப்பய.. ஆனால் அடக்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு ஜனநாயகவாதியாக இருக்கிறேன்.. பிள்ளைகளை பலியிட நான் தயாராக இல்லை.. அதனால வழக்கு.. உள்ளே போய்விட்டால்.. எப்ப வருவாங்க அப்படீன்னு குழந்தைங்க கேட்பாங்களேன்னு அமைதியாக இருக்கேன்.. நீ யாரு முதல்ல.. என் கட்ட விரல் ..க்கு கூட வரமாட்டா.. யாரு நீ.. ஸ்கெட்ச் போட்டுருவேன் என்கிறாய்.. ஸ்கெட்ச் பென்சில் தூக்குவியா நீ.. தம்பி சிரிக்க சிரிக்க பேசுறேன்னு நினைக்காத..சீரியஸான ஆள் நான்.
கொல்லையில வேற பொம்பளையே இல்லையா?
2023-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி: என் மனைவி இந்த விவகாரத்தில் கோபப்பட்டு என் குரல் வளையை நெரித்து, இவ்வளவு பெண்கள் உள்ள கொல்லையில் உனக்கு பழகுவதற்கு வேறு பொம்பளையே கிடைக்கலையா என கேட்டார்.
விரும்பி உறவு வெச்சவ..
2025- மார்ச் 1-ந் தேதி இரவு அளித்த பேட்டி: நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருஷமாச்சு.. இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை? நான் பேசுறது மட்டும் முகம் சுளிக்க வைக்கிறதா? 15 வருஷமாக என்னை பழிபோட்டு அவமானப்படுத்துறீங்க? என்னைய என் குடும்பத்தை என் பிள்ளைகளை குதறி தின்றீங்களே எல்லோரும்.. என் மகன் பெரியவனுக்கு நல்லா விவரம் தெரிந்துவிட்டது.. அதை எல்லாம் அவன் பார்த்தா, அவன் நண்பர்கள் பார்த்தா என்னாவாங்க? அப்போ எல்லாம் உங்களால் முகம் சுளிக்க முடியலை? பாலியல் குற்றவழக்கு... பாலியல் குற்றவழக்கு... என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ... சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுளிச்சா சுளிச்சுட்டு இரு...
அவ ஒரு பாலியல் தொழிலாளி
2025 மார்ச் 2-ந் தேதி சென்னையில் பேட்டி: என் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை பாலியல் தொழிலாளி.. அவ பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரங்களை நான் காட்டவா? 15 ஆண்டுகள் நான் கண்ணியமாக இருந்த போது நீங்கள் எல்லாம் என்ன ** செய்தீர்கள்? அவ தான் பொண்ணா.. அவளுக்குதான் மனசு இருக்கா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லை? எங்களுக்கு நீதி இல்லையா?
பெரியார் வழியில் நடந்தேன்
2025 மார்ச் 2-ந் தேதி சென்னை பேட்டி: நான் தான் உண்மையில் கம்யூனிஸ்ட்.. ஏனெனில் நீங்க செய்ய வேண்டிய வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. "Enjoyment without Responsibility" பற்றி நீங்கதான் பேசுறீங்க.. எவனாவது பாசத்துக்கு புள்ளைய பெத்துக்குவானா தேவைன்னா அப்படியே போய்ட்டு வந்துடனும்.. குடும்பம் என எவனாவது வாழ்ந்துகிட்டு இருப்பானா? Enjoyment without Responsibility என அய்யா ஆங்கிலத்திலேயே சொல்கிறாரே" என்று சொன்னது யார்? பெரியார் சொன்னதாக இப்ப இருக்கிற ஒரு அய்யா சொல்கிறார். Enjoyment without Responsibility என சொன்னது உங்க பெரியார்.. அப்படிப்பட்ட பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கீங்க..Enjoyment without Responsibility-ல் உங்க Responsibility என்ன?அம்மையார் கனிமொழிக்கும் சேர்த்துதான் கேட்கிறேன்.. கம்யூனிச தோழர்களுக்கும்தான் கேட்கிறேன்.. பெரிய்ய.. பெரியார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்களே.. அவர் சொன்னதுதான்.. அவர் சொன்னதைத்தான் நான் செஞ்சேன்னு வெச்சுக்குங்க.. அதில் உனக்கு என்ன பிரச்சனையாகுது? ஏம்பா உங்க தலைவர் சொன்னதைத்தானே நாங்கள் கடைபிடிக்கிறோம். அதில் உங்க கருத்து என்னப்பா? என்ன விளையாட்டு பண்ணிகிட்டு இருக்கீங்க?
ரூ30,000 பிளஸ் சின்னவீடு பேரம்
2025 மார்ச் 2-ந் தேதி தூத்துக்குடியில் பேட்டி: எனக்கு முன்னாடி நான்கைந்து பேரை இதே மாதிரி செய்திருந்தால் அந்த வேலைக்கு பேரு என்ன சொல்வீர்கள்? ஒருவரிடம் பழகுவது.. பின்னர் வெளியே போய் வம்படியாக வழக்காடுவது... மிரட்டி பணம் கேட்பது எனில் அதை என்னவென்று சொல்வது? அவ (நடிகை) என்னிடம் வைத்த அதிகபட்ச கோரிக்கை என்ன தெரியுமா? என் மூத்தவரிடம்.. அவர் இறந்துவிட்டார்.. மாதம் ரூ.30,000 கொடுத்து என்னை மெயின்டெயின் செய்ய சொல்லுங்க என்பதுதான் அந்த நடிகை பேசிய பேரம்.. அதாவது தன்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள சொல்லி பேரம் பேசினார். அப்போது எங்கப்பா பாரதிராஜா கேட்டார்..டே மகனே! என்னதான் வேணும் அவளுக்கு என கேட்டார்.. அதற்கு, ஒன்றுமில்லை.. ரூ.30,000 கொடுத்து என்னை வைத்துக் கொள் என்கிறாள்.. நான் வைத்துக் கொள்ளவா? உன் மருமகள் என்னை சோற்றில் விஷத்தைப் போட்டுக் கொல்வா.. பரவாயில்லையா? என்றேன். உடனே, அப்படியா சொல்றாடா? என கேட்டவர் பாரதிராஜா.
-
ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி -
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.. அன்பான சர்வாதிகார ஆட்சி டூ திருச்சி தலைநகரம்.. சீமான் அதிரடி -
தமிழகத்துக்கு 5 தலைநகர்.. சென்னை – திருச்சி - கோவை - மதுரை -குமரிக்கு இடம் - நாம் தமிழர் அறிவிப்பு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications