ஆதார் +செல்வமகள் சேமிப்பு திட்டம் +பான் கார்டு.. டிசம்பர் முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்! கவனம்
சென்னை: டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆதார் அட்டை மற்றும் பரஸ்பர நிதிகள், F&O, TDS தொடர்பான விதிகள் மற்றும் சிலிண்டர் விலைகள் உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளனர்.
ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கான இறுதி நேரம் நெருங்கி வருகிறது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்போடு இருக்கும். இதனால் ஃபின்டெக் நிறுவனங்கள் மிக எளிதாக உங்களை தொடர்பு கொள்ள முடியாது. ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். ஆனால் உங்களின் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதை பயன்படுத்தி உங்களின் விவரங்களை பெற முடியாது. ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் இருந்து மத்திய அரசு ₹600 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது.
சேமிப்பு கணக்குகள்: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான் புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளன.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் மாற்றப்படலாம்.
சிலிண்டர் விலை: வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த அக்டோபர் மாதம் உயர்ந்தது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து உள்ளது. ரூ.1855க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை 820 ஆக உள்ளது. இந்த மாதம் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படலாம்.












Click it and Unblock the Notifications