Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை-புதுச்சேரிக்கு இடையேயுள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும். ஆனால் அக்கரை-மாமல்லபுரம் வரையில் உள்ள சாலைகள் விரிவாக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டதால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் சுங்க கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டுமல்லாது கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை முதல் புதுச்சேரி வரை 3 இடங்களில் டோல்கேட்கள் இருக்கின்றன. அதாவது உத்தண்டி, மாமல்லபுரம் மற்றும் அனுமந்தை ஆகிய இடங்களில் டோல்கேட்கள் இருக்கின்றன. இதில் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் உத்தண்டி டோல்கேட் மற்றும் திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதியிலிருந்து ஈசிஆர் ரோட்டுக்கு வரும் வழியில் இருக்கும் கோவளம் டோல்கேட் ஆகியவற்றில் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 கட்டண உயர்வு

கட்டண உயர்வு

புதிய கட்டண உயர்வுப்படி சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் ஆகியவை ஒருமுறை பயணம் செய்ய ரூ.47 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வாகனங்கள் சென்று திரும்ப ரூ.70 கட்டணமாகவும், ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128 கட்டணமாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலகு ரக வாகனம் மற்றும் சிற்றுந்துகள் இந்த வழியாக ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கடட்ணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பேருந்துகளுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.157 ஆகவும், சென்று திரும் ரூ.236ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கனரக வாகனங்கள்

கனரக வாகனங்கள்

வர்த்தக வாகனங்களை பொறுத்த அளவில், ஒரு முறை பயணம் செய்ய ரூ.172ம், சென்று திரும்ப ரூ.258ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே 4-4 சக்கர கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.247 மற்றும் ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் சக்கரங்கள் கொண்ட அதி கனரக கட்டுமான வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.301, சென்று திரும்ப ரூ.451 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளூர் கார்களுக்கு சுங்க சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பேருந்துகள் எனில் ரூ.1900 செலுத்த வேண்டும்.

மதுரை

மதுரை

சென்னை புதுச்சேரி வழித்தடத்தை தவிர தமிழ்நாடு அரசின் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வண்டியூர் சங்கச்சாவடியில் கார், ஜீப், வேண் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ராமநாதபுரம் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். இதே மதுரை மதல் அருப்புக்கோட்டை வரை எனில் ரூ.35ம், மதுரை முதல் கப்பலூர் வரை எனில் ரூ.50ம் ஒருமுறை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இதே ராமநாதபுரத்திலிருந்து சிந்தாமணி சுங்கச்சாவடி வழியாக அருப்புக்கோட்டைக்கு ரூ.25, ராமநாதபுரம் டூ கப்பலூர் எனில் ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலையங்குளம் சுங்கச்சாவடி வழியாக அருப்புக்கோட்டை முதல் கப்பலூர் வரை ஒருமுறை செல்ல ரூ.15. ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.25 மாதாந்திர அட்டையை பயன்படுத்தினால் ரூ.555 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+