"பிரியாணி முதல் மலபாரி சிக்கன்" வரை.. ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு புதிய மெனு.. லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சைவம் முதல் அசைவம் வரை ஏராளமான உணவுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரியாணி, மலபாரி சிக்கன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதுஇதுபற்றிய விவரம் வருமாறு:

நாடு விட்டு நாடு பறக்கும் விமானங்களிலும், உள்நாட்டில் பயணிக்கு விமானங்களிலும் பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விமான நிறுவனங்களும் வெவ்வேறு வகையான மெனுவில் பயணிகளுக்கு உணவுகளை வழங்கி வருகின்றன.

air india food menu

இந்நிலையில் தான் ‛ஏர் இந்தியா' நிறுவனம் புதிய உணவு பட்டியலை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதில் பிரியாணி முதல் மலபாரி சிக்கன் வரை தென்இந்திய மக்களின் பேவரைட் உணவுகள் உள்பட இந்தியாவின் பிற இடங்களில் பிரபலமான உணவுகள், ஐரோப்பிய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி டெல்லியில் இருந்து லண்டன் ஹீத்ரோ, நியூயார்க், மெல்போர்ன், சிட்னி, டொராண்டோ மற்றும் துபாய் செல்லும் விமானங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானம், மும்பையில் இருந்து நியூயார்க் செல்லும் விமானங்களில் இந்த உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடு பறக்கும் விமானங்கள் உள்பட இன்னும் சில விமானங்களில் இது முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அடுத்தக்கட்டமாக உள்நாட்டு பயணங்களிமும் படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது.

அதன்படி முதல் வகுப்பில் (First Class)பயணிக்கும் பயணிகளுக்கு artisanal breads, இனிப்புகள், ஓயின், ஷாம்பெயின் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. பிசினஸ் கிளாசில்(Business Class) பயணிப்போருக்கு பல சுவையான உணவுகள் வழங்கப்படும். பிரிமீயம் எக்கனாமி ( Premium Economy) மற்றும் எகனாமி (Economy) வகுப்பில் பயணிப்போருக்கு சமச்சீரான தாலி உணவுகள் வழங்கப்படும்.

குறிப்பாக நம் நாட்டில் பிரபலமாக உள்ள உணவுகளான அவதி பனீர் அஞ்சீர் பசாந்தா (வெஜ் அவாதி தாலி), முர்க் மசாலாம் (அசைவ அவாதி தாலி) , அதேபோல் ராஜஸ்தானி பீசன் சில்லா, மலபாரி சிக்கன் கரி, மலாய் பலாக் கோப்டா உள்ளிட்டவை பிரிமீயம் எகனாமியில் வழங்கப்பட உள்ளது. முதல் வகப்பில் தென்னிந்திய தாலி உணவுகள் வழங்கப்படும். அதில் பிரியாணியும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் சார்பில், ‛‛இந்தியாவின் சுவையான உணவு மற்றும் சர்வதேச உணவுகளை இணைக்கும் வகையில் மெனு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பயணியையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய பிஸ்ட்ரோக்கள் மற்றும் பான்-ஆசியன் போன்ற உலகளாவிய உணவு வகைகளின் கலவையை ஒருசேர கொண்டுள்ளது. மேலும் இந்திய பாரம்பரிய உணவுகளையும் பிரதிபலிக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+