பிடிஆர்.. இவரெல்லாம் தேசிய அரசியலில் இருக்க வேண்டியவர்.. மதுரையில் வந்து மாட்டிக்கிட்டார்: பிரபலம்
சென்னை: ஓபிஎஸ் அப்போதிருந்தே பாஜகவுடன்தானே இருக்கிறார்? இதுவரை பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது ஓபிஎஸ் பேசியிருப்பாரா? பலமுறை பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் சந்திப்பதற்காக ஓபிஎஸ் செல்லும்போதெல்லாம் மனோஜ் பாண்டியனும்தானே உடன் சென்றிருக்கிறார்? இவ்வளவு காலம் ஓபிஎஸ்ஸுடனேயே மனோஜ் பாண்டியன் இருந்துவிட்டு, இபபோது பாஜகவை காரணம் காட்டுவது ஏன்?" என்று பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Fine Time Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "மனோஜ் பாண்டியன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்..

பாஜகவுடன் அதிமுக செல்வதை யாருமே எதிர்க்கவில்லையே? ஓபிஎஸ் பாஜகவிடம்தான் போய் நின்றார்.. 2021 தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணியில்தான் மனோஜ் பாண்டியனே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்..
மனோஜ் பாண்டியன் அரசியல்
பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள் என்று எப்படி மனோஜ் பாண்டியன் சொல்லலாம்? இவருக்கு உண்மையிலேயே அதிமுகவில் மரியாதையில்லை.. அதனால்தான் பாஜகவை ஒரு சாக்காக இப்போது காரணம் சொல்கிறார்..
அப்படி பார்த்தால் ஓபிஎஸ் பாஜகவுடன்தானே இருக்கிறார்? இதுவரை பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது ஓபிஎஸ் பேசியிருப்பாரா? பலமுறை பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் சந்திப்பதற்காக ஓபிஎஸ் செல்லும்போதெல்லாம் மனோஜ் பாண்டியனும்தானே உடன் சென்றிருக்கிறார்? இவ்வளவு கால ஓபிஎஸ்ஸுடன்தானே மனோஜ் பாண்டியன் இருந்தார்?
தனக்கு தேவையான எதிர்பார்ப்புகள் அதிமுகவில் பூர்த்தியாகவில்லை என்று தெரிந்ததுமே, வேறு கட்சிக்கு தாவிவிட்டார், எல்லாத்தையும் பதவியில் அனுபவித்துவிட்டு, கடைசியில் அணி மாறும்போது, "பாசிச பாஜக" என்று சொல்லிவிட்டு வந்துவிடுவது தமிழகத்தில் ஒரு நிலையான வசனமாக உள்ளது.
திமுகவில் அதிமுக பிரபலங்கள்
திமுகவில் அதிமுக பிரமுகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.. அதிமுகவின் அடிப்படையான விஷயங்கள் திமுகவுக்கு வரவேண்டும் என்றுதான் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பிரமுகர்கள் விரும்புகிறார்..
மருது அழகுராஜ், அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் வந்துள்ளனர்.. அதிமுகவின் அடையாளமாக இருந்த அன்வர் ராஜாவே திமுக பக்கம் சென்றுள்ளார்..
அதிமுக தன்மை கொண்டவையாக திமுக மாறும் என்று ஸ்டாலின் விரும்புகிறார்.. ஆனால், இவர்கள் எல்லாம் இணைந்திருப்பதால் திமுகவில்
எந்தவிமான பாதிப்பை ஏற்படுத்தும்? தாக்கத்தை ஏற்படுத்தும்? லாபத்தை ஏற்படுத்தும்? என்று தெரியவில்லை.
8 அமைச்சர்கள்
அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும்போது,
ஏற்கனவே 30, 40 வருடங்களாக திமுகவிலேயே இருப்பவர்களின் நிலைமை என்ன? அங்கே அவர்களது இருப்புக்கு ஒரு பாதிப்பை இது ஏற்படுத்தவே செய்யும்..
தற்போதுள்ள 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்றால், திமுகவில் உள்ள 8 பேரின் வாய்ப்பு பறிக்கப்பட்டதாகவே அர்த்தம்.. அதை கட்சியும் ஏற்றுக்கொள்கிறது போலும்.
எடப்பாடிக்கு எதிராக கலகம்
அதிமுகவில் முக்கிய நபர்கள் வெளியேறிவிட்டநிலையில், கட்சிக்கு பாதிப்புக்கு உள்ள நிலையில், தேர்தலை எப்படி சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஒருவேளை தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், எடப்பாடி பழனிசாமியின் நிலைமை தலைகீழாக மாற துவங்கும்.. அவரை நோக்கி கேள்விகள் எழும்.. 4வது தோல்வி என்பதால், எடப்பாடிக்கு எதிரான கலகம் வெடிக்கும்..
கூட்டணிக்குள் ஒரு கட்சியும் உள்ளே வராத சூழலில், தேர்தலுக்கு முன்பே என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் பாஜக என்ன செய்ய போகிறது தெரியவில்லை.. பீகார் தேர்தல் முடிந்துள்ளதால், இனிமேல்தான் இந்த சிக்கல்கள் பக்கம் அமித்ஷாவின் கவனம் திரும்பும்.
பண்பாளர் பிடிஆர்
திமுகவின் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.. பிடிஆர் உண்மையிலேயே பாவம்.. அவரது தகுதிக்கும் தரத்துக்குக்கும் எதுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றே தெரியவில்லை..
மெத்த படித்த பண்பாளர் பிடிஆர்.. விஷயம் தெரிந்தவர்.. தேசிய அரசியலில் இருக்க வேண்டியவர். பதவியேற்று, 3 பட்ஜெட்களை தாக்கல் செய்தவர்.. முதல் 2 ஆண்டுகள் எங்கே பார்த்தாலும் பிடிஆர், பிடிஆர் என்று இமேஜ் பூஸ்ட் அப் ஆனது.. ஆனால், திடீரென துர்திருஷ்டவசமாக ஒரு ஆடியோ லீக் ஆகவும், அவரது அரசியலும் தலைகீழாக மாறிப்போனது.. இன்று அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை..
மதுரை அரசியலில் பிடிஆர்
மதுரையில் எப்போதுமே கோஷ்டி பூசல் உண்டு.. பிடிஆர் போன்ற மிகப்பெரிய படிப்பாளிகள், இத்தகைய அரசியலுக்கு பொருத்தமில்லாதவர் என்று நினைக்கிறேன். அவரையெல்லாம் ராஜ்ய சபாராக உயர்த்தி, பாஜக அல்லாத அரசில் வர்த்தகம் அல்லது தொழில்துறை அமைச்சராக இருந்திருக்க வேண்டும்.
அப்படி பிடிஆர் இருந்திருந்தால், அவரது அந்த இடத்தில்தான் அவரது அறிவு நாட்டுக்கு பயன்படும். அவர் என்றோ ராஜ்ய சபா ரூட்டில் சென்றிருக்கவேண்டும். ஆனால் மாநில அரசியல் மாட்டிக் கொண்டார். அதுவும் மதுரையில் சிக்கலில், குளறுபடிகள் உள்ள நிலையில், பிடிஆர் போன்ற மேன்மையானவர்களும் பணிபுரிய வேண்டியிருக்கு. ஆனால் இப்படியே எத்தனை நாளைக்கு பணிபுரிவார் என்று தெரியவில்லை..
மொத்தத்தில் பிடிஆரின் திறமையையும், அறிவையும் மாநில அரசியலில் வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications