Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மணி நேரத்தில்.. தமிழக அரசியலே ஆடிப்போயிடுச்சு.. அடுத்தடுத்து பறந்த போன்கால்ஸ்.. பெரும் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த 3 மணி நேரத்தில் ஏகப்பட்ட மோதல்கள், வாதங்கள், போன் கால்கள், பேட்டிகள், கண்டனங்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு அரசியலே திரும்பி பார்க்கும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து உள்ளன. அந்த சம்பவங்களை வரிசையாக இங்கே பார்க்கலாம்..

செல்வப்பெருந்தகை பயணம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்க அவசரமாக பயணம் மேற்கொண்டு உள்ளார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மீதான புகார் குறித்து ஆலோசனை நடத்தவே காங்கிரஸ் தலைமை என்னை பெங்களூர் அழைத்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொடுத்த புகார் கடிதத்துடன் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tamil Nadu politics

அதற்கு முன் செய்திகளை சந்தித்த அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா..? அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்? அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு செல்கிறேன்

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது; இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்? கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திரிஷா கண்டனம்

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும்." என்றார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்தால் தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" எனக் கூறியுள்ளார்.

இதற்கு தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல.. நடிகை த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜயுடன் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை - டிஆர் பாலு மோதல்

பாஜக தலைவர் அண்ணாமலை, 'திமுக ஃபைல்ஸ்' (DMK Files) என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். அதில், திமுக பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிராக டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சராக இருந்தபோது 10 அல்ல.. 2 கப்பல்கள் தான் வாங்கினேன்" என அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலு வாதம் வைத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

, "நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக சொல்வதில் உண்மையில்லை, உள்நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை. 10 கப்பல்கள் இல்லை. 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது. அழகிரி விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ளார் என்று வாதம் வைத்துள்ளார்.

காலையில் போன கடிதம்

இது போக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) செயற்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து கசிந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், டெல்லி மேலிடத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ள இ மெயில் கடிதத்தில், "வெறும் இடப்பங்கீடு மட்டும் போதாது, அதிகாரப் பங்கீடும் வேண்டும்" என அதிரடி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியின் சமூக நீதி மற்றும் நிறுவன ஒருமைப்பாடு என்ற சித்தாந்தத்தைத் தமிழகத்தில் வலுப்படுத்த, காங்கிரஸ் கட்சி வெறும் 'ஜூனியர் பார்ட்னராக' மட்டும் நீடிக்கக் கூடாது என்பதே இக்கடிதத்தின் சாராம்சம்.

தொண்டர்களின் 4 முக்கிய கோரிக்கைகள்

தமிழக காங்கிரஸ் மேலிடத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:

ஆட்சியில் உறுதிசெய்யப்பட்ட பங்கு: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசாங்கத்தில் காங்கிரஸிற்குப் அதிக பங்கு இருக்க வேண்டும். இது வெறும் வாய்மொழி வாக்குறுதியாக இல்லாமல், முறைப்படியான 'ஒப்பந்தமாக' இருக்க வேண்டும்.

அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகள்: கட்சியின் தற்போதைய பலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

உள்ளாட்சி மற்றும் வாரியங்களில் பிரதிநிதித்துவம்: உள்ளாட்சித் தேர்தல்கள், நகராட்சித் தலைமைப் பதவிகள், அரசு வாரியங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காங்கிரஸிற்கு நியாயமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் நிலையான சதவிகிதம்: அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸிற்கென ஒரு குறிப்பிட்ட சதவீத இடங்களை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.

அரசியல் நெருக்கடியும் பின்னணியும்

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) வருகை மற்றும் அவர் முன்வைக்கும் 'அதிகாரப் பகிர்வு' என்ற முழக்கம், காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 58 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ், இப்போது ஆட்சியில் பங்கு கேட்பது திமுகவிற்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூட்டணி ஆட்சித் தத்துவம் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி எனது சகோதரர் போன்றவர், மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து தமிழக அரசியலில் முக்கியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+