சோஷியல் மீடியாவில் டிரெண்டான விஜய்-உதயநிதியின் பழைய போட்டோ! இதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். அவரை வீட்டு வாசல் வரை வந்து உதயநிதி ஸ்டாலின் வந்து வரவேற்றது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், விஜய்-உதயநிதியின் பழைய போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.

Vijay Udhayanidhi

குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக எனும் திராவிட கட்சிகளை வீழ்த்தியிருக்கிறார். இருப்பினும் அவர் முதலமைச்சராக நாற்காலியில் அமர, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டி இருந்தது. இந்த விஷயத்தில் நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றும், விஜய் முதலமைச்சராக ஆன பின்னர் 6 மாதங்களுக்கு எவ்வித தொந்தரவையும் செய்ய மாட்டோம் என்றும் திமுக தெளிவாக கூறிவிட்டது.

இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகியுள்ளார்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விஜய் சந்தித்திருக்கிறார். ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற விஜய்யை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாசல் வரை வந்து வரவேற்றிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வரும் நிலையில், மறுபுறம உதயநிதி-விஜய்யின் பழைய படமும் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் 2008 ஆம் ஆண்டு வெளியான 'குருவி' திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம், திரைப்படத் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில், இளம் வயதில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.

தேர்தலில் திமுகவை வீழ்த்தியதன் மூலமும், திமுகவை தீய சக்தி என்று விமர்சித்ததன் மூலமும் விஜய் திமுகவுக்கு எதிரானவராக அறியப்பட்டிருந்தார். ஆனால், விமர்சனங்களை தவிர்க்க முடியாது, இருப்பினும் நாங்கள் நல்ல அரசியல் தோழமைகள் என்பதை மு.க.ஸ்டாலின் சந்திப்பு மூலம் விஜய் அறிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+