செங்கோட்டையன் சட்டை பாக்கெட்டில் பெரிதாக விஜய் படம்.. முன்பு அப்படி சொன்னாரே? ஏன் இந்த மாற்றம்?
சென்னை: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன், தவெகவில் இணைந்த பிறகும் கூட தனது சட்டை பையில் ஜெயலலிதா படத்தை வைத்து சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், வேலூரில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையன், தனது சட்டை பையில் விஜய் படத்தை வைத்திருந்தார். முன்பு இதுபற்றிய கேள்விக்கு செங்கோட்டையன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அதிமுக-வில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெகவில் செங்கோட்டையன்
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், சட்டசபை தேர்தல் பணிகளிலும் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, வரும் சட்டசபை தேர்தலில் செங்கோட்டையனை கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நிறுத்த விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெகவில் இணைந்த பிறகும், தனது சட்டைப்பையில் ஜெயலலிதா படத்தையே வைத்திருந்தார் செங்கோட்டையன். செய்தியாளர் சந்திப்பில், "தவெகவில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருப்பது ஏன்" என்ற கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், "நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்திருக்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைத்து அம்மா ஜெயலலிதாவால் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன்.
செங்கோட்டையன் சொன்னது என்ன?
பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கத்தான் நினைத்தேன். ஆனால் என்னை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் புதிய மாற்றம், தூய்மையான அரசியல் வேண்டும் என தவெகவில் இணைந்திருக்கிறேன். என்னுடைய சட்டைப் பையில் நான் மதிக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை வைப்பது என்பது என்னுடைய உரிமை.
நான் மாற்றி இருந்தால் 'இவனெல்லாம் என்ன தியாகி, கட்சிக்காக உழைத்தவனா, கொள்கைப் பிடிப்பு இல்லாதவன், கட்சித் தாவிவிட்டான், சட்டைப் பையில் இருந்த அம்மா படத்தையும் மாற்றிவிட்டான்' என்று விமர்சிப்பார்கள்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள் விஜய்யின் வாகனத்தில் அலங்கரித்து வருகிறது. என்னுடைய வாகனத்திலும், சட்டைப் பையிலும் அம்மா ஜெயலலிதா படம் வைத்திருப்பேன். அது என்னுடைய உரிமை. அதை தவெகவினரும் ஏற்றுக் கொண்டார்கள்" என்று அப்போது தெரிவித்திருந்தார் செங்கோட்டையன்.
மேலும், தனது அலுவலக பேனரிலும் ஜெயலலிதா படத்தையும் இடம்பெறச் செய்திருந்தார் செங்கோட்டையன். அலுவலகத்தின் உள்ளே எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இப்போதும் உள்ளன.
சட்டைப் பையில் மேஜர் மாற்றம்
இந்நிலையில் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார். முதல் முறையாக தனது சட்டைப் பையில் விஜய் படத்தை செங்கோட்டையன் வைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் மேலே சிறியதாக ஒருபக்கம் எம்.ஜி.ஆர் படமும், மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
என்னுடைய சட்டைப் பையில் நான் மதிக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை வைப்பது என்பது என்னுடைய உரிமை என முன்பு கூறி இருந்த செங்கோட்டையன், இப்போது விஜய் படத்தை பெரிதாகவும், அதில் சிறியதாக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும் வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கோபி தொகுதியில் போட்டியிட இருக்கும் சூழலில் தான் விஜய் படத்தை தனது சட்டைப்பையில் வைத்துள்ளார் செங்கோட்டையன்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications