கவனிச்சீங்களா? காட்சிகள் மாறுது! கமல்ஹாசன் - எஸ்வி சேகர் - மைத்ரேயன்! பிராமணர்களுடன் நட்பாகும் திமுக
சென்னை: இன்று காலை திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிராமண சமூக பின்னணியை கொண்ட இவர் திமுகவில் இணைந்திருப்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பிராமண சமூக பின்னணியை கொண்ட மைத்ரேயன் திமுகவை மிக கடுமையாக எதிர்த்து வந்தார். திமுக தலைமையை மிக கடுமையாக தாக்கி பேசி வந்த நிலையில் இப்போது திமுகவில் இணைந்துள்ளார். இன்று அறிவாலயத்தில் மைத்ரேயனை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து , திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026இல் தமிழகத்தில் திமுக ஆட்சி உறுதி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது.. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை 99 எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது என்று திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.பி. உறுப்பினர் மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பிராமணர்களுடன் நட்பாகும் திமுக
திராவிட வரலாற்றுப் பின்னணியில் உருவான திமுக.. நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் அரசியலில் இருந்து தோன்றியது. அரசியல் மற்றும் சமூகத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் என உணரப்பட்டதற்கு எதிர்வினையாக, பிராமணர் அல்லாத சமூகத்தினரின் சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவத்தை திமுக வலியுறுத்தியது.
காலப்போக்கில், திமுக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கியது. திமுகவின் தலைமை பிராமணர்கள் கட்சியில் பங்கேற்பதை வெளிப்படையாகத் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கட்சியில் பெரிய பொறுப்புகளை திமுகவில் பிராமணர்கள் பெறுவது கொஞ்சம் அரிதாகவே இருந்தது. அதிமுகவில் பிராமணர் ஜெயலலிதா மேலே வந்தது போல திமுகவில் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக பிராமணர்களுக்கும் நெருக்கமாக, நட்பாக தொடங்கி உள்ளது
திமுக எம்பியான கமல் - பிராமண பின்னணி
கமல்ஹாசன், பரமக்குடியைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமண (ஐயங்கார்) குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் பார்த்தசாரதி. இப்போது திமுக கூட்டணியின் கீழ் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ராஜ்ய சபா எம்பி ஆகி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகத்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக. கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம் ; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார்.
கமலின் கோரிக்கை
இந்த பிடிவாதம், தலைமைக்கு (திமுக) உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படின்னா எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்' என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள் என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் சிட்டிங் தொகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.
லோக்சபா தான் முக்கியம்னா எங்க சின்னத்தில் நில்லுங்க ; நீங்க விரும்பும் தொகுதியை ஒதுக்கிடுறோம். இல்லைன்னா, தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்றத் தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ' என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார். இப்படியே இருந்த நிலையில்தான், தொகுதி கிடைக்காததால் ராஜ்யசபா ஓ.கே. வா ? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது என சென்டிமெண்டாக எங்க தலைமை பேசியது. வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல் என்று அப்போது திமுக வட்டாரங்கள் சொன்னது. இதெல்லாம் லோக்சபா தேர்தல் சமயத்தில் கடந்த வருடம் நடந்தது. அதன்படியே அவர் ராஜ்ய சபா எம்பி ஆனார்.
எஸ்.வி. சேகர் (பிராமணர்) - ஸ்டாலின் நெருக்கம்
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் எஸ்.வி. சேகரின் (பிராமணர்) 'நாடகப்பிரியா' குழுவின் 50-வது ஆண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது எஸ்.வி. சேகரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டிப் பேசுகையில், "நம்முடைய சேகர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் பேசும்போது 'நம்முடைய முதலமைச்சர், நம்முடைய முதலமைச்சர்' என்று சொன்னார்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்; நன்றியோடு வந்திருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய எஸ்.வி. சேகர் அவர்கள் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், இப்போது எந்தக் கட்சி என்று தெரியாது; நம்ம கட்சி. தலைவர் (கலைஞர்) சொல்வார், 'நான்' என்றால் உதடு ஒட்டாது. 'நாம்' என்றால் தான் உதடுகள் ஒட்டும். அதனால்தான் இன்றைக்கு நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, "2026 தேர்தலுக்கு இவரைப் பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை" என்று எஸ்.வி. சேகரை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துரைத்தார்.
இவரும் கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தவர். பிராமணர் பின்னணி காரணமாக திமுக - எஸ்வி சேகர் இடையே சில கசப்பான வாதங்களும் கூட நடந்து உள்ளன. ஆனால் இப்போது அதே எஸ்வி சேகர் ஸ்டாலின் உடன் நெருக்கமாகி உள்ளார். இதெல்லாம் பார்க்கும் போது திமுக பிராமணர்களுக்கும் நெருக்கமாக, நட்பாக தொடங்கி உள்ளதோ.. அவர்களையும் உள்ளடக்கிய அரசியலை மேற்கொள்ள முயல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications