வாடகை வீடு டூ 1 கோடி சொத்து .. கடனை வைத்தே ஜெயித்துக் காட்டிய சென்னை இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் வாங்குவது ஆபத்தானது, கடனில்லா வாழ்க்கையே நிம்மதியானது என்பது இன்றைக்கு பலரும் நம்பும் பொருளாதார சித்தாந்தம். ஆனால் செல்வந்தர்கள் பலர் கடனையே ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தி மிகப்பெரிய சொத்துக்களை உருவாக்கி ஜெயிக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் கதையை கூறுகிறேன். அவருக்கு இன்று 40 வயது ஆகிறது. மிக சரியாக 7 வருடம் முன்பு அவர் கடன் இல்லாத நிலையை அடைந்தார். அவரிடம் சொத்தும் இல்லை. ஆனால் இன்று அவருக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. ஆனாலும் கடனும் இருக்கிறது. ஆனால் அவர் தனது கடனை எளிதாக அடைக்க முடியும் என்றாலும், அதனை சரியாக பயன்படுத்தி வென்று வருகிறார். அவரது பார்முலாவை பார்ப்போம்.

கடன் பொதுவாக எதற்கு வாங்குவார்கள்.. பள்ளி கட்டணம் செலுத்த, திருமணம் செய்ய, மருத்துவ அவசரம் போன்ற பல்வேறு அவசர காரணங்களுக்கு கடன் வாங்குவார்கள். அதேபோல் சிலர், செல்போன் வாங்க, கார் வாங்க, விலை உயர்ந்த பைக் வாங்க, சுற்றுலா செல்ல, ஷாப்பிங் போக, ஓட்டல்களில் சாப்பிட மற்றும் ஆடம்பரச் செலவுகளுக்காகக் கடன் வாங்குவார்கள். இந்த இரண்டு வகை கடன்களை வாங்குவோம் கடன் சுழலில் சிக்கி வெளியே வர முடியாமல் தவிக்ககிறார்கள்.. ஆனால் இன்னொரு வகையானவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களை வாங்கி 'சொத்துக்களை உருவாக்குகிறார்கள். அப்படி கடன் வாங்கி சொத்துக்களை உருவாக்கியதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பு உயருவதால் கடனை எளிதாக அடைந்து வெளியே வருகிறார்கள்.

From Rented House to 1 Crore Property Chennai Youth Triumphs by Leveraging Debt

ஆனால் இதில் ஆபத்தும் இருக்கிறது. நான் கூறிய நபர், முதன் முதலாக வாடகை வீட்டில் இருந்து ஒத்திக்கு செல்ல வங்கியில் கடன் வாங்கினார். அதன் மூலம் வாடகை பணம் மிச்சமானது.சரியாக அதனை இஎம்ஐ கட்டியவர், அதன்பிறகு கடனுக்கு இடம் வாங்கினார். அந்த இஎம்ஐ முடிந்ததும், அடுத்தாக தங்க நகையும் எதார்த்தமாக கடனுக்கு வருடம் வருடம் வாங்கியபடி இருந்தார். அதன்பிறகு சென்னைக்கு மாறி வந்தார். சென்னையில் ஒத்திக்கு வீட்டில் குடியிருந்தபடி, கடன்களை அடைத்தவர், இறுதியாக சென்னையின் புறநகரில் ஒத்தி காசை வாங்கி வீடு வாங்கினார். அவர் வாங்கி நகைகளில் பல அடகு கைகளில் தான் உள்ளது. எனினும் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

அவர் முதல் முதலில் வாங்கிய இடம் ஐந்து லட்சம் ஆனால் அதன் மதிப்பு இப்போது 20 லட்சம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. அடுத்தாக 8 சவரன் வரை தங்க நகை வாங்கியிருந்தார். அவர் வாங்கும் போது, 35000, 50000 என்கிற அளவில் தான் இருந்து இப்போது, ஒரு சவரன் தங்க நகையே 1.10 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. இறுதியாக அவர் வீடு வாங்கிய பகுதியில், இடத்தின் மதிப்பு, சதுர அடி 2500ல் இருந்து 4000 ஆக உயர்ந்தது. இதனால் அவரது சொத்து மதிப்பு 10 லட்சம் வரை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கோடி ரூபாயை நெருங்கிவிட்டது அவரது சொத்துமதிப்பு.. இப்போது அவர் நினைத்தால், கடனை அடைக்க ஏதேனும் ஒரு சொத்தை விற்று வெளியே வரலாம். ஆனால் அவர் சொத்தை விற்கவில்லை. இஎம்ஐ கட்டி அடுத்த ஐந்து வருடத்தில் மீண்டு விட முடியும் என்று நம்பி சரியான நிதி திட்டமிடலுடன் பயணிக்கிறார்.

அதேநேரம் அவருக்கு ரிக்ஸ் இல்லாமல் இல்லை.. பார்ட் டைமில் செய்த தொழிலால் ஏற்பட்ட நஷ்டம், வேலை நிலையாக இருக்குமா என்ற பயம் என பல சிக்கலைகளை சந்தித்தார். எனினும் துணிந்து பயணித்ததால், கடந்த ஏழு வருடத்தில் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளார். இப்போது அவர் உருவாக்கிய சொத்துக்களே அவரை காப்பாற்றிவிடும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தெளிவாக சொல்வது என்றால், உலகின் பெரும் செல்வந்தர்கள் பயன்படுத்தும் "முதலில் கடன் மூலம் சொத்துக்களை உருவாக்கு; பிறகு திட்டமிட்ட பணப்புழக்கம் மூலம் கடனை அடை" என்ற பார்முலாவால் வென்றுள்ளார். அவர் இன்னும் ஐந்து அல்லது 10 வருடத்தில் கடனே இல்லாத நிலைக்கு மாறிவிடுவார். கோடிக்கணக்கான சொத்துக்களுக்குஅதிபதியாக இருப்பார். முறையான நிதி திட்டமிடலுடன் செயல்பட்டால் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கை கூறுகிறார். ஆனால் இவர் கூறியதில் சிக்கலாமல் இல்லாமல் இல்லை.. பெரிய ரிஸ்க் எடுத்தே ஜெயித்திருக்கிறார்.

முக்கிய எச்சரிக்கை :

கடன் வாங்கி சொத்து சேர்ப்பது என்பது "கூர்மையான கத்தி மேல் நடப்பது போன்றது." அதைச் சரியாகப் பயன்படுத்தினால் பலன் தரும்; தவறாகப் பயன்படுத்தினால் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் அனைவருக்கும் இது செட் ஆக வாய்ப்பே கிடையாது: நிலையான மாத வருமானம், குடும்பத்தின் ஆதரவு மற்றும் கட்டுப்பாடான நிதி ஒழுக்கம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உத்தி கை கொடுக்கலாம். அதேபோல் உங்களின் மாதாந்திரச் சம்பளத்தில் 40% முதல் 50%-க்கு மேல் இஎம்ஐ போகவே கூடாது.

அதேபோல் திடீரென வேலை இழப்பு, மருத்துவ அவசரம் அல்லது தொழில் நஷ்டம் போன்ற எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்க குறைந்தது 6 மாத இஎம்ஐ தொகையைச் சேமிப்பில் வைத்திருப்பதும் அவசியம். அதேபோல் நிலம், வீடு வாங்கும் போது, அனைத்து இடங்களின் மதிப்பும், தங்கம் போன்ற சொத்துக்களின் மதிப்பும் எப்போதும் ஒரே சீராக உயரும் என்று சொல்லவும், அவர் முறையாக திட்டமிட்டது ஒருபுறம் எனில், தங்கம், நிலம், வீடு என எல்லா சொத்துக்களும் ஒரே நேரத்தில் ராக்கெட் வேகத்தில் ஏறியது ஒரு வகையில் அதிர்ஷ்டம் தான்..

எனவே நண்பரின் இந்த கதை போல, மற்றவர்களின் கதையைப் பார்த்து குருட்டுத்தனமாகக் கடன் வாங்கி எதுவும் செய்துவிட வேண்டாம். உங்களின் சொந்த வருமானம், கடனைத் திருப்பிச் செலுத்த உங்களால் எந்த அளவிற்கு முடியும் மற்றும் சந்தையின் அபாயங்களைப் புரிந்துகொண்டே நிதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+