செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்து வருகிறது மத்தியில் உள்ள பாஜக அரசு. செந்தில் பாலாஜி, அரவிந்த் கெஜ்ரிவால், கேசிஆர் மகள் கவிதா, மம்தாவிற்கு நெருக்கமான மஹுவா மொய்த்ரா, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் எடுத்தடுத்து அமலாக்கத்துறையிடம் சிக்கி உள்ளார்கள்.

செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், கேசிஆர் மகள் கவிதா, மம்தாவிற்கு நெருக்கமான மஹுவா மொய்த்ரா, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் என எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லோர் மீதும் பாஜக குற்றம்சாட்டி வழக்கு போட்டது.. எல்லாமே எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டிய வழக்குகள் தான்.

From Senthil Balaji to Kejriwal How BJP government Targets Opposition

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சி காலத்தில் இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தான் அன்று ஆளுநரிடம் புகார் கொடுத்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மொத்தமாக டெல்லியில் காலியாக காரணமாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தார். காங்கிரஸ் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த பல புகார்கள் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்சி பறிபோகவும் காரணமாக இருந்தது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மதுபான ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி தான் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களால் ஆள் தான் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவும் சிக்கலை சந்தித்தார். டெல்லியில் மதுபான ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேசிஆர் மகள் கவிதா என அடுத்தத்து அமலாக்கத்துறையின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரனும் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளத. விஜயன் மகள் வீணா விஜயன் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீணா விஜயனும், அவரது ஐ.டி. நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திற்கும் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியதுடன் வழக்கும் பதிவு செய்தது.

மூன்று முதல்வர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+