செந்தில் பாலாஜி முதல் ஓ பன்னீர்செல்வம் வரை... திமுகவில் ஐக்கியமான அதிமுக தலைகள்.. ஸ்டாலினின் வியூகம்
சென்னை: பொதுவாகவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அல்லது சேர முடியாத அல்லது விலகிய தலைவர்கள் புகழிடமாக தேடி வரும் இடம் என்றால் அது திமுக தான்.. அப்படி வரும் அதிமுக தலைவர்கள கௌரமாக நடத்துகிறது திமுக. அதிகாரமிக்க பதவிகளையும் அள்ளி வழங்கி உள்ளது. அண்மை காலத்தில் மட்டுமே பலர் அப்படி திமுகவில் இணைந்து அமைச்சர்களாகவும் ஆகி உள்ளார்கள். செந்தில் பாலாஜி, சேகர்பாபு , எவ வேலு, ரகுபதி என அமைச்சர்கள் பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அமைச்சர்களாகி உள்ளார்கள். இறுதியாக அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்கிற உயர்ந்த பதவியில் இருந்தே ஓ பன்னீர்செல்வமே இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவை பொறுத்தவரை தன்னை எதிர்ப்பர்களையும் அரவணைத்து உள்ளே இழுத்து கொண்டு அரசியல் செய்கிறது. ஒரு காலத்தில் திமுகவை அழிப்போம்.. திமுக தீயசக்தி என்று முழங்கியவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அந்த கட்சியிலேயே போய் இணைந்துள்ளார்கள். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழி உண்டு. அது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு முழுமையாக பொருந்தும்.

தற்போதைய திமுக அமைச்சரவையில் ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கியத் தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்த பல முகங்கள் முன்னணி அமைச்சர்களாகவும் உள்ளனர். கட்சியின் கொள்கைப் பிடிப்பைத் தாண்டி, நிர்வாகத் திறமைக்காக இவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக முக்கியமான துறைகளை ஒதுக்கியுள்ளார்.
அதிமுகவிலிருந்து வந்து திமுகவின் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக மாறியவர்கள்:
முதலாவதாக, ஈரோடு மாவட்டத்தின் மூத்த தலைவரான சு. முத்துசாமி அவர்கள். எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலேயே போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது திமுகவின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். இவரைப் போலவே, அதிமுகவின் ஆரம்பக் காலத்திலிருந்து இருந்த எ.வ. வேலு, இன்று திமுகவின் மிக முக்கியத் துறையான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
தென் தமிழகத்தில் குறிப்பாக சிவகங்கை பகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜகண்ணப்பன், 1991-96 அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது இவர் திமுக அமைச்சரவையில் பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கிறார். அதேபோல், அதிமுகவில் அமைச்சராக இருந்த எஸ். ரகுபதி, இன்று திமுகவின் சட்டத்துறை அமைச்சராக மிக முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்.
சென்னையைப் பொறுத்தவரை, அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் பி.கே. சேகர் பாபு, இவர் ஒரு காலத்தில் சட்டசபையில் ஜெயலலிதாவிற்க திமுக எம்எல்ஏக்களை அடிக்க பாய்ந்ததாக புகார்கள் உண்டு. இன்று திமுகவின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும், சென்னைபெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சராகவும் இருக்கிறார். அதேபோல் ஐ. பெரியசாமி மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போன்றோரும் தங்களின் அரசியல் பயணத்தின் தொடக்க காலங்களில் அதிமுக பின்னணி கொண்டவர்களாக இருந்தார்கள், அதன்பிறகு கலைஞர் காலத்தில் திமுகவில் சேர்ந்தவர்கள் ஆவார்.
மிக அண்மையில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் செந்தில் பாலாஜி. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த இவர், திமுகவில் இணைந்தவுடன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு போன்ற மிக முக்கியமான துறைகளைக் கவனிக்கும் அமைச்சராக உயர்ந்தார். ஆனால் அமலாக்கத்துறை வழக்கின் காரணமாக அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். எனினும் கொங்கு மண்டலத்தில் அதிகாரமிக்க திமுக தலைவராக செந்தில் பாலாஜி தான் இருக்கிறார்.
இவ்வாறு, அதிமுகவின் பல மாவட்டக் கோட்டைகளைத் தகர்த்து திமுகவில் இணைந்த இந்தத் தலைவர்கள், இன்று திமுக அரசின் நிர்வாக இயந்திரத்தைச் சுழற்றும் முக்கிய அச்சுகளாக இருக்கிறார்கள். இது திமுகவின் உட்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தினாலும், இவர்களின் தேர்தல் கால வியூகங்கள் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றிகளைத் தேடித்தருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
சமீபத்தில் கூட செந்தில் பாலாஜி போட்ட வியூகம் தான் கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது. செந்தில் பாலாஜியை பொறுத்தவரை டிடிவி தினகரனை நம்பி அமமுகவில் இணைந்தார். ஆனால் அங்கு அவரால் பிரகாசிக்க முடியவில்லை.. திமுகவில் இணைந்தார். கரூர் மாவட்டம் முழுவதிலும் திமுக எம்எல்ஏக்களை ஜெயிக்கவைத்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தோற்கவைத்தார். இதன்பலனாக அப்போது அமைச்சரவையில் பெரிய பொறுப்பு தந்து ஸ்டாலின் அழகு பார்த்தார்.
தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், முதல்வர், துணை முதல்வர் என்ற பொறுப்பில் எல்லாம் இருந்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து விலகிய, இப்போது திமுகவில் இணைகிறார்.. ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த பலர், திமுகவை மிக கடுமையாக விமர்சித்தார்கள். அந்த வரிசையில் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக பேசியிருந்தார். ஆனால் அவரும் தற்போது திமுகவில் இணைகிறார் என்பது ஆச்சரியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள
-
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications