Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார், சிம் கார்டு முதல் சிலிண்டர் வரை! இன்று டிசம்பர் 1 முதல் எல்லாமே மாற போகுது! இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பல்வேறு விஷயங்கள் அப்படியே மாறும். பல்வேறு பொருட்களின் விலை மாறும். அதேபோல் சில அடையாள அட்டைகள், கார்டுகளின் விதி முறைகள் மாறும். சில இடங்களில் கார்டுகளை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு தொடங்கும் அல்லது முடியும்.

அந்த வகையில் இந்த டிசம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற்றம் அடைய உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.

From Sim card to Aadhaar Card: Many things are going to change from today December 1

சிலிண்டர் விலை உயர்வு; வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்துள்ளது. ரூ.1,942க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,968.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சிலிண்டர் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 918க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தேர்தல் முடிந்த நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக பெட்ரோல் விலை: கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று எந்த விதமான பொருட்களின் விலையும் குறையவில்லை.

புதிய சிம் கார்டு வாங்கும் விதிமுறை: சைபர் மோசடியை சமாளிக்கும் நோக்கத்துடன், தொலைத்தொடர்பு துறை (DoT) டிசம்பர் 1 முதல் புதிய சிம் கார்டு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. சிம் கார்டுகளை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று அமலுக்கு வருகிறது. ஒரு ஆதார் ஐடியில் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே சிம்களை வாங்க முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஒரு அடையாளத்தின் அடிப்படையில், தனிநபர்கள் ஒன்பது சிம் கார்டுகளை எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. மொத்தமாக பல்க் சிம் கார்டுகளை வாங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் கார்டு அப்டேட் விதிமுறை மாற்றம்: கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்புய. டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.

ஜிமெயில் கணக்குகள் முடக்கம்: டிச. 1 முதல் செயல்படாத ஜிமெயில் கணக்குகளை அகற்றுவதற்கு Google முடிவு செய்துள்ளது, அதே சமயம் இதில் உங்கள் புகைப்படங்கள், Google ஆவணங்கள் மற்றும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் எந்தத் தரவையும் பாதுகாக்க வழி உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்கும் விதமாக டிசம்பர் முதல் செயல்படாத கணக்குகளை நீக்கத் தொடங்கும் என்று நிறுவனம் ஆரம்பத்தில் மே மாதம் அறிவித்தது. அது இன்று முதல் செயல்படுத்தப்படும்.

யூபிஐ ஐடி விதிமுறை: நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்கள் இன்று முதல் நீக்கப்படும். அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இந்த மாதம் இந்த விதி அமலுக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+