சிம் கார்டு முதல் வருமான வரி வரை! இன்று ஜனவரி 1 முதல் எல்லாமே மாற போகுது! நோட் பண்ணுங்க
சென்னை; பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பல்வேறு விஷயங்கள் அப்படியே மாறும். பல்வேறு பொருட்களின் விலை மாறும். அதேபோல் சில அடையாள அட்டைகள், கார்டுகளின் விதி முறைகள் மாறும். சில இடங்களில் கார்டுகளை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு தொடங்கும் அல்லது முடியும்.
அந்த வகையில் இந்த ஜனவரி 1ம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற்றம் அடைய உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.

புதிய சிம் கார்டு வாங்கும் விதிமுறை: சைபர் மோசடியை சமாளிக்கும் நோக்கத்துடன், தொலைத்தொடர்பு துறை (DoT) ஜனவரி 1 முதல் புதிய சிம் கார்டு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. சிம் கார்டுகளை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று அமலுக்கு வருகிறது. ஒரு ஆதார் ஐடியில் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே சிம்களை வாங்க முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஒரு அடையாளத்தின் அடிப்படையில், தனிநபர்கள் ஒன்பது சிம் கார்டுகளை எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. மொத்தமாக பல்க் சிம் கார்டுகளை வாங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய தொலைத்தொடர்பு மசோதா அமலுக்கு வந்தவுடன் சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் பராமரிப்பது மாற்றம் அடைந்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் முயற்சியில், சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் அரசாங்கம் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இனி, சிம் கார்டைப் பெறுவதற்கு டிஜிட்டல் நோ யுவர் கஸ்டமர் (கேஒய்சி) செயல்முறை கட்டாயமாக்கப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டு வாங்கும் செயல்முறையின் போது வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் தரவை பெற வேண்டும். போலி சிம் கார்டுகளை வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கூடுதலாக, சிம் விற்பனையாளர்கள் இனி முழுமையான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் சிம் கார்டுகளை மொத்தமாக விநியோகிப்பது தடைசெய்யப்படும்.
யூபிஐ ஐடி விதிமுறை: நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்கள் இந்த மாதம் முழுமையாக நீக்கப்படும். அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இந்த மாதம் இந்த விதி அமலுக்கு வரும்.
வருமான வரி: ஜனவரி 1 முதல், 2022-23 (AY-2023-24) நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர் இனி தாமதமாகத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது. கூடுதலாக, தங்கள் வருமானத்தில் பிழைகள் உள்ள தனிநபர்கள் இனி திருத்தப்பட்ட வருமானத்தை சமர்ப்பிக்க முடியாது. புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இன்சூரன்ஸ்: ஜனவரி 1 முதல், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் பாலிசிதாரர்களுக்கு வாடிக்கையாளர் தகவல் தாளை வழங்குமாறு உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆவணம் முக்கியமான காப்பீடு தொடர்பான தகவல்களை எளிய சொற்களில் விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications