5 ஸ்வீட் நியூஸ்.. ஸ்டாலின் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகள்.. மாணவர்கள் + பிற்படுத்தப்பட்டோர் குஷி
சென்னை: நேற்றும் நேற்று முதல் நாளும் நடந்த எஸ்பிக்கள், ஆட்சியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்.
இந்த 2 நாள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. முக்கியமாக தமிழ்நாட்டின் பாதுகாப்பு, நலத்திட்டங்கள், மக்கள் பிரச்சனை, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 முக்கியமான முடிவுகள் இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவை பின்வருமாறு..

முடிவு 1: பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்./ குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும் ,உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன. பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு சிலர் செயல்படுவர், அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது, கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முடிவு 2: சிறுபான்மையினருக்கு, தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் எண் உருவாக்க வேண்டும். வாபஸ் மூலம் புகார் கொடுக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும் ,உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன.சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிவு 3: சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும். சென்னை உள்ளிட்ட தரக்கூடிய ஒன்றாக பல இருப்பது மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் போக்குவரத்து நெரிசல். குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும்.
முடிவு 4: அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.
முடிவு 5: காவல் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 50 ஆயிரமாக வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications