மகேந்திராவில் கலக்கும்.. தமிழக அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்! ஆனந்த் மகேந்திரா பாராட்டு!
சென்னை: சமீபத்தில் மகேந்திரா நிறுவனம் XUV 7XO எனும் காரை அறிமுகப்படத்தியிருந்தது. இந்த காரில், உலகத்தரம் வாய்ந்த சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்ப மாற்றத்தை வியந்த ஆனந்த் மகேந்திரா, இதற்காக உழைத்த தமிழக அரசு பள்ளியின் முன்னாள் மாணவரும், மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவராகவும் உள்ள ஆர்.வேலுசாமியை பாராட்டியுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் மகேந்திரா நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. இதற்கு காரணம், நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புதான். அப்படித்தான் தனது XUV 7XO ரக காரில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புதிய தொழில்நுட்பம்
கார்கள் சாலைகளில் ஸ்மூத்தாக பயணிக்க, சஸ்பென்ஷன் ரொம்பவும் முக்கியம். அதுவும் இந்திய சாலைகளுக்கு சஸ்பென்ஷன் ரொம்ப, ரொம்ப முக்கியமானது. ஒரு இடத்தில் கரடு முரடாகவும், மற்றொரு இடத்தில் ஸமூத்தாகவும் இந்திய சாலைகள் இருக்கும். எனவே, கார் வாங்கும்போது, அது ஆஃப் ரோடுக்கா? அல்லது நகர்ப்புறங்களுக்கான சாலைகளுக்கா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். இதனால், ஒரு காலை இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது.
'டாவின்சி டேம்பிங்'
இங்குதான் மகேந்திரா தனது கண்டுபிடிப்பை கொண்டுவந்தது. அதாவது தனது XUV 7XO காரில் 'டாவின்சி டேம்பிங்' எனும் புதிய சஸ்பென்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த வகை சஸ்பென்ஷன்கள் சாலைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். எனவே காரில் உள்ளே இருப்பவர்களுக்கு கார் குலுங்குவதே தெரியாது.
ஸ்மூத்தான பயணம்
நொடிப்பொழுதில் இந்த 'டாவின்சி டேம்பிங்' தொழில்நுட்பமானது சாலைகளின் தன்மையை அறிந்துக்கொள்ளும். சாலை ஆஃப் ரோட்டில் செல்கிறது எனில், சஸ்பென்ஷனை சாஃப்டாக மாற்றும். அதேபோல கார் நெடுஞ்சாலையில் செல்கிறது எனில், ரோட்டுக்கும்-காருக்கும் இடையேயான உராய்வை அதிகரிக்க செய்ய அதற்கேற்ப சஸ்பென்ஷனை மாற்றும்.
வளைவுகளில் திரும்பும்போதும், திடீரென பிரேக் பிடிக்கும்போதும் கார் ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் இருக்கவும் இந்த 'டாவின்சி டேம்பிங்' தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதேபோல பயணத்தின்போது சஸ்பென்ஷனால் ஏற்படும் சத்தத்தையும் இது குறைக்கிறது.
யார் இந்த ஆர்.வேலுசாமி
இவ்வளவு சிறப்பு வாய்ந்த 'டாவின்சி டேம்பிங்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது, ஆர்.வேலுசாமி தலைமையிலான குழுதான். எனவேதான் வேலுசாமிக்கு ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில், "வேலுவும், அவரும் அவரது குழுவினரும் இணைந்து, புதிய மஹிந்திரா XUV 7XO காரில், உலகின் முதல் டாவின்சி டாம்பிங் தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்
நாங்கள் அன்புடன் 'வேலு குரு' என்று அழைக்கும் வேலு, தமிழ்நாட்டின் நாமக்கல்லில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றார்.
அவர் எங்களிடம் ஒரு ஜூனியர் இன்ஜினியராகச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் தலைவரானார். கடந்த ஆண்டு, அவர் எங்கள் ஆட்டோமோட்டிவ் வணிகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மஹிந்திரா ரிசர்ச் வேலி மற்றும் எங்கள் முழு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவிலும் இதே போன்ற திறமைகளைக் கொண்ட ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டிலேயே உருவான பொறியாளர்கள்.
ஆனந்த் மகேந்திரா பாராட்டு
- கற்றுக்கொள்ளத் துடிப்பவர்கள்
- தலைமை தாங்கத் துடிப்பவர்கள்
- உலகின் சிறந்தவர்களுடன் போட்டியிடத் துடிப்பவர்கள்.
இந்தியா ஒரு திறமைக்கான தொழிற்சாலை. அதனால்தான், 1991-ல் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது, உலகளாவிய ஆலோசகர்கள் நாங்கள் கைவிட்டுவிட வேண்டும் என்று பரிந்துரைத்தபோதும், உலகளாவிய போட்டியாளர்கள் எங்கள் வீழ்ச்சியை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், நாங்கள் அதைக் கேட்க மறுத்துவிட்டோம்.
உத்வேகம் கொடுத்த வேலு
நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்.
நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
மேலும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் உங்களுக்குச் சேவை செய்வதில் நாங்கள் இன்னும் உந்துதலுடன் இருக்கிறோம்.
இன்னும் பல வரவிருக்கின்றன... வேலுவும் எங்கள் ஆட்டோமோட்டிவ் குழுவும் எனக்கு திங்கட்கிழமைக்கான உத்வேகம் மட்டுமல்ல, எனது தொடர்ச்சியான உத்வேகமும் கூட" என பதிவிட்டிருக்கிறார்.
-
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications