டெட்லைன் கொடுத்தும் செய்யலையா! இன்று முதல் உங்க ஃபாஸ்டேக் கணக்கு ரத்து! பணத்தையும் எடுக்க முடியாது!
சென்னை: ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் ஃபாஸ்டேகில் கேஒய்சியை புதுப்பிக்காவிட்டிருந்தால் அந்த கார்டுகள் வங்கிகளால் முடக்கப்படும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு வருகிறது என்பதால் இன்று முதல் நிறைய அதிரடி மாற்றங்கள் வந்துள்ளன. அதில் முக்கியமானது ஃபாஸ்டேக்!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் வரிசையில் நின்று பணம் செலுத்தி விட்டுதான் அந்த பகுதியை கடக்க முடியும். அதாவது சுங்க வரி!
அப்படி சுங்க வரி வசூல் செய்யும் போது அனைவருமே பணம் கொடுப்பது, மீதி சில்லறையை கொடுப்பது, வண்டி எண்ணை என்டர் செய்து டோக்கன் கொடுப்பது போன்றவற்றால் நிறைய நேர விரயம் ஏற்படுகிறது.
இதனால் அவசர காரியங்களுக்காக செல்லும் பயணிகள் அவதிப்பட்டுக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரொக்கமில்லா டிஜிட்டல் முறையாகும். அனைத்து 4 சக்கர வாகனங்களும் தங்கள் வாகனங்களில் பார்கோடுடன் கூடிய ஒரு ஸ்டிக்கரை ஒட்டியிருக்க வேண்டும்.
இதை 35 வங்கிகள் வழங்கி வருகின்றன. வாகன ஓட்டியின் ப்ரீபெய்டு கணக்குடன் பாஸ்டேக் இணைக்கப்பட்டு அது வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் பொருத்தப்படுகிறது. ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை கொண்டு இணைக்கப்பட்ட வங்கி ப்ரீபெய்டு கட்டணத் தொகையில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
வாகனங்கள் அந்த வழியே செல்லும் போதும் வரும் போதும் இதே முறையில் பணம் எடுக்கப்படுகிறது. அந்த பார்கோடில் வண்டி எண், வாகன உரிமையாளரின் பெயர் உள்ளிட்டவை இருக்கும். அந்த பார்கோடு சுங்க சாவடியில் பொருத்தப்பட்ட சென்சார் ஸ்கேன் செய்வதால் சுங்க கட்டணம் ப்ரீபெய்டு கணக்கிலிருந்து செல்கிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது.
இதற்காக பெரும்பாலானோர் பேடிஎம் வாலட்டை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த வாலட்டில் மார்ச் 15, 2024 க்கு பிறகு ரீசார்ஜ் செய்ய கூடாது என ஆர்பிஐ அதிரடியாக தெரிவித்துவிட்டது. இதனால் பேடிஎம் வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு பாஸ்டேக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பாஸ்டேக்குடன் புதிய வங்கியின் கேஒய்சியை இணைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். FAStag KYC ஐ முடிக்க செய்ய தேவையான ஆவணங்களாக வாகனத்தின் பதிவு சான்றிதழ், அடையாளச் சான்று, முகவரி ஆதாரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவையாகும்.
ஃபாஸ்டாக் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை வங்கியில் இருந்து நீங்கள் புதுப்பிக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் அந்த கார்டுகள் வங்கியால் முடக்கப்படும். இதனால் கார்டில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் யாராவது பாஸ்டேக்குடன் கேஒய்சி சரிபார்ப்பை புதுப்பிக்காமல் விட்டிருந்தால் அவர்களுடன் பாஸ்டேக்குகள் ரத்து செய்யப்படும்.
அது போல் ஆதாருடன் பான் கார்ட்டை இணைக்காவிட்டால் இன்று முதல் பான் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. எத்தனை பான்கார்டுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது. இவையெல்லாம் முன்கூட்டியே அரசால் அறிவுறுத்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications