இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை.. சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து.. எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
சென்னை: சில பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேசின் பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் எவை:
ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில் இருந்து பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில், காலை 11.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில் இருந்து ஆவடி செல்லும் புறநகர் ரயில், ஜூன் 11,13 ஆகிய தேதிகள் பட்டாபிராம் ரயில் டெப்போவில் இருந்து காலை 11.55 மணிக்கு மூர் மார்கெட் காம்பிளக்ஸ் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அது போல் ஜூன் 12-ம் தேதி, காலை 5.40 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில், ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு மூர் மார்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில், ஜூன் 12-ம் தேதி, காலை 5.40 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 3.50 மணிக்கு ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில். ஜூன் 12-ம் தேதி காலை 4.45 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் புறநகர் ரயில். ஜூன் 14 காலை 3.20 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ஆகியன ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 12 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 14 காலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து, மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
4 நாட்களுக்கு முற்றிலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு மத்தியில் பகுதியாக சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றை காண்போம்.
பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் பட்டாபிராம் - மூர் மார்க்கெட் புறநகர் ரயில், ஆவடி வரை மட்டுமே செல்லும்
ஜூன் 14-ம் தேதி, காலை 3.50 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்
ஜூன் 12, 14-ம் தேதிகளில், காலை 4.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்
ஜூன் 12-ம் தேதி அரக்கோணம் - வேளச்சேரி புறநகர் ரயில், காலை 4 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்படும். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications