ஆதாருடன் பான் கார்டை இணைக்கலையா? இன்று முதல் பான் கார்டு ரத்து.. ஏப்ரல் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்?
சென்னை: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க நேற்றுடன் கெடு முடிவடைந்த நிலையில் அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டுகள் இன்று முதல் ரத்து செய்யப்படும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டுகளின் போதும் சில மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் புதிய நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வருமான வரி சம்பந்தமான மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

வருமான வரி: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வருமான வரி நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன. வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் புதிய வரி முறையில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய நிதியமைச்சகம் புதிய வரி முறையை டீஃபால்ட்டாக தேர்வாக்குகிறது.
தனி நபர் பழைய வரி முறையில் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்தால் வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை. அது போல் புதிய வரி ஸ்லாப்பில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வரும் 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், ரூ 6 லட்சம் முதல் ரூ 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ 9 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு 15 சதவீத வரியும், ரூ 12 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
சர்சார்ஜ்: பழைய வரி முறையில் மட்டுமே இருந்த standard deduction ரூ 50000 என்பது தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். ரூ 5 கோடிக்கு மேல் உள்ள வருமானத்திற்கு விதிக்கப்படும் சர்சார்ஜ் எனப்படும் அதிகபட்ச கூடுதல் வரியானது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தர்களுக்கு வரி சுமையை குறைக்கும்.
எல்ஐசி: ஏப்ரல் 1, 2023 அல்லது அதற்கு பிறகு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை மொத்த ப்ரீமியம் ரூ 5 லட்சத்தை தாண்டினால் அந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
பான்+ ஆதார்: அது போல் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆம் தேதியாகும். இந்த தேதிக்குள் உங்களுடைய பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்படும்.
சமையல் கேஸ் சிலிண்டர்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அதன் படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால் தற்போது லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மார்ச் மாத விலையே நீடிக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்: இன்று முதல் புதிய நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் வருகிறது. புதிய விதியின் கீழ் பென்சன் திட்ட கணக்கில் உள்ளே செல்ல இரு காரணி அங்கீகாரம் தேவைப்படும் (2 factor authentication). சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் செல்போனில் பெறப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்ணை கொண்டு உள்ளே நுழைய வேண்டும்.
கிரெடிட் கார்டு: பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ஏப்ரல் 1க்கு பிறகு வாடகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இது சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 வரை பொருந்தும்.
பிஎஃப்: புதிய நிதியாண்டில் தொடங்கும் பிஎஃப் திட்டத்தில் வேறு நிறுவனத்திற்கு மாறி உங்களின் பழைய பிஎஃப் ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். வேறு வேலைக்கு சென்றால் பிஎஃப் தொகையை மாற்ற கோர தேவையில்லை. அது தானாகவே மாறிவிடும்.
ஃபாஸ்டாக்: அது போல் ஃபாஸ்டாக் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை வங்கியில் இருந்து நீங்கள் புதுப்பிக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் அந்த கார்டுகள் வங்கியால் முடக்கப்படும். இதனால் கார்டில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது. இவ்வாறு அதிரடியான மாற்றங்கள் இன்று முதல் வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications