அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்.. எந்தெந்த பேருந்துகளில் பயணிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் இன்று அதிகாலை பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முடியாது.

முதல் கையெழுத்து
தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டஸ்டாலின் தான் தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு உள்பட 5 திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்.

பெண்களுக்கு இலவச பயணம்
இந்த திட்டங்களில் ஒன்றுதான் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது. இதன்படி தமிழகம் முழுவதும் இந்த திட்டம் இன்று முதல் அமலாகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் பயணம் செய்யலாம்.

பயண அட்டை தேவையில்லை
நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதே போல் பேருந்து பயண அட்டையும் நடத்துனரிடம் காண்பிக்க வேண்டியதில்லை. இந்த திட்டத்துக்கு கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை அரசு மணியமாக வழங்கி ஈடுகட்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. பணி புரியும் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் சுமார் 40 சதவீதம் நகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

எந்தெந்த பேருந்துகள்?
அதன்படி இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணம் கொண்ட நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ''பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்'' என்று பேருந்துகளின் முகப்பு கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரை சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்து என வெவ்வேறு விதமான பேருந்துகள் ஓடுகின்றன. இதில் சாதாரண பேருந்துகளில் மட்டுமே பெண்கள் பயணம் செய்ய முடியும். டீலக்ஸ் போர்டு கொண்ட பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது. இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தொலைதூர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications