கைதான ஒரு உளவாளி கூட தமிழர் இல்லை.. இந்தி தெரிந்தவர்களை களமிறக்கி உளவு பார்க்க விட்ட பாகிஸ்தான்!
சென்னை: கடந்த சில நாட்களாக இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பலர் கைதாகி வருகின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உளவாளிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உளவு வேலைகளை பார்த்தவர்களுடன் ஜோதி தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே மாறும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது உளவு பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உளவாளி உறுதியான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கினால் அவர் உளவு அசெட்டாக மாறுவார்.
இப்படி பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்து கைதான எல்லோரும் இந்தி தெரிந்தவர்கள். இதில் தென்னிந்தியர்களும் கைதாகி உள்ளனர். ஆனால் அவர்களும் இந்தி தெரிந்தவர்களே. பாகிஸ்தான் அதிகாரிகள் உடன் எளிதாக இந்தியில் பேசும் வகையில்.. இந்தி தெரிந்த இந்தியர்களை மட்டுமே பாகிஸ்தான் ராணுவம் இங்கே உளவு செய்ய தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இந்தி அதிக புழக்கத்தில் இருக்கும் மொழி என்பதால் எளிதாக பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவில் உளவு செய்யும் உளவாளிகளுடன் பேச முடியும் என்பதால் இந்தி தெரிந்தவர்களை மட்டுமே பாகிஸ்தான் ராணுவம் களமிறக்கி இருக்கிறது. இதன் காரணமாகவே கைதான உளவாளிகள் லிஸ்டில் ஒரு தமிழர் கூட இல்லை.
கைதானவர்கள் லிஸ்ட் பின்வருமாறு,
1. முகமது ஹாரூன்
மாநிலம்: டெல்லி
கைது யாரால் செய்யப்பட்டது: உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (UP ATS)
குற்றச்சாட்டுகள்: பாகிஸ்தான் உயர் கமிஷன் அதிகாரி ஒருவருடன் முக்கியமான உள்நாட்டு பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமை மற்றும் விசா விண்ணப்பதாரர்களுக்கு உதவுதல் என்ற போர்வையில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டது.
2. ஜோதி மல்ஹோத்ரா
மாநிலம்: ஹரியானா
கைது யாரால் செய்யப்பட்டது: ஹிசார் காவல்துறை
குற்றச்சாட்டுகள்: பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தானிய நாட்டவருடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமை.
3. அன்சாருல் மியா அன்சாரி
மாநிலம்: நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்
கைது யாரால் செய்யப்பட்டது: இந்திய உளவுத்துறை அமைப்புகள்
குற்றச்சாட்டுகள்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்று உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவிற்குள் ஊடுருவினார். அவரது கைது மூலம் டெல்லியில் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டது..
4. அக்லக் அசாம்
மாநிலம்: ஜார்கண்ட்
கைது யாரால் செய்யப்பட்டது: இந்திய உளவுத்துறை அமைப்புகள்
குற்றச்சாட்டுகள்: இந்தியாவிற்குள் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
5. வேதன் லட்சுமணன் தண்டேல் (இந்தி தெரிந்தவர்)
மாநிலம்: கர்நாடகா
கைது யாரால் செய்யப்பட்டது: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA)
குற்றச்சாட்டுகள்: சமூக ஊடகங்களில் ஹனி டிராப் மூலம் சிக்கி உளவாளி ஆகி உள்ளார். கார்வாரில் உள்ள INS கடம்பா கடற்படைத் தளம் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு கசியவிட்டது.
6. அக்ஷய் ரவி நாயக் (இந்தி தெரிந்தவர்)
மாநிலம்: கர்நாடகா
கைது யாரால் செய்யப்பட்டது: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA)
குற்றச்சாட்டுகள்: கார்வார் கடற்படைத் தளம் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசியவிட்டதில் தொடர்புடையவர்.
7. அபிலாஷ் பி.ஏ. (இந்தி தெரிந்தவர்)
மாநிலம்: கேரளா
கைது யாரால் செய்யப்பட்டது: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA)
குற்றச்சாட்டுகள்: சமூக ஊடகங்களில் ஹனி டிராப் மூலம் சிக்கியவர், கொச்சி கடற்படைத் தளம் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கசியவிட்டது.
8. அமன் சலீம் ஷேக் (இந்தி தெரிந்தவர்)
மாநிலம்: மகாராஷ்டிரா
கைது யாரால் செய்யப்பட்டது: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA)
குற்றச்சாட்டுகள்: விசாகப்பட்டினம் கடற்படை தளம் தொடர்பான தகவல்களை கசியவிட்டார்.
9. நூருதீன் என்கிற ரஃபி (இந்தி தெரிந்தவர்)
மாநிலம்: கர்நாடகா
கைது யாரால் செய்யப்பட்டது: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA)
குற்றச்சாட்டுகள்: பாகிஸ்தான் உத்தரவின் பேரில் உயர்தர போலி இந்திய நாணயத்தாள்கள் அடித்து தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications