திமுகவை நிதானிக்க விடாத பாஜக.. தேசிய அளவில் அடுத்தடுத்த அட்டாக்கை பாருங்க.. "அப்படி" என்ன காரணம்?
சென்னை: தேசிய அரசியலில் திமுக மீது பாஜக அடுத்தடுத்து தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தேசிய அரசியலில் பாஜக கட்சி மற்றும் பாஜகவின் டாப் தலைவர்கள் திமுகவை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளனர். முன்னதாக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்த போது அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார்.
ஸ்டாலினுக்கு எதிராக டிரெண்ட்: பீகாரில் முதல்கட்ட கூட்டம் நடந்த போதும் சரி, இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கூட்டம் நடந்த போதும் சரி.. ஸ்டாலினுக்கு எதிராக பாஜக தலைவர்கள் தீவிரமாக பேசினர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான டிரெண்ட் செய்யப்பட்டது.
அதன்பின் மும்பைக்கு ஸ்டாலின் செல்லும் நேரத்தில் மீண்டும் அவருக்கு எதிராக பாஜகவினர் சார்பாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஒன்று செய்யப்பட்டது. ஸ்டாலினை இகழும் விதமாக வார்த்தை ஒன்றை குறிப்பிட்டு இந்த டிரெண்ட் மேற்கொள்ளப்பட்டது. பீகார் மற்றும் பெங்களூர் கூட்டத்திலும் இதேபோல் ஸ்டாலினுக்கு எதிராக டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் செய்யப்படுகிறது.
ரெய்டு: ஏற்கனவே அமலாக்கத்துறை மூலம் அமைச்சர் பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் குறி வைக்கப்பட்டு உள்ளனர். நேற்றும் கூட நடத்தப்பட்ட மணல்குவாரி ரெய்டுக்கு பின் திமுகவிற்கு எதிரான போகஸ் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் நம்பர் 2 ஒருவரை குறி வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திமுக அமைச்சர்கள் பலர் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

உதயநிதி விவகாரம்: இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆங்கங்கே வழக்குகள் போடப்பட்டு வருகின்றன, சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நேற்று முதல்நாள் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.
அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,
மோடி - விடாதீங்க உத்தரவு: இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்' என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது; சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாடியபோது சனாதனம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய அரசியலில் திமுக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது திடீரென பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை குறி வைக்க தொடங்கி உள்ளனர். இப்போது மட்டுமில்லை கடந்த சில நாட்களாகவே மோடி மற்றும் பாஜகவினர் திமுகவை டார்கெட் செய்ய தொடங்கி உள்ளனர்.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுக பக்கம் பாஜக தற்போது மொத்தமாக போகசை திருப்பி உள்ளது. காங்கிரசை எதிர்ப்பதை விட திமுகவைத்தான் பாஜக அதிகம் எதிர்க்க தொடங்கி உள்ளது.

ஏன்? : திமுகவை மட்டும் இப்படி பாஜக தாக்க பின்வரும் விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன. அதன்படி 1. எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுக பங்கு வகிக்கிறது. 2. பல மாநிலங்களில் பாஜக தோல்வி அடைய காரணமான பெண்களுக்கு ரூ.1000, இலவச பஸ் போன்ற திட்டங்களின் மாஸ்டர்மைண்ட் திமுகதான். 3. தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி பார்முலாவை தேசிய அளவில் கொண்ட செல்ல திமுக நினைக்கிறது.
4. காங்கிரஸ் கட்சியுடன் நட்பாக உள்ள திமுக மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைய பாலமாக உள்ளது. 5. தேசிய அளவில் எப்படி கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளை வழங்குகிறது. 6. கொள்கை ரீதியாக பாஜகவை பெரிதாக கட்சிகள் எதிர்க்காத நிலையில் திமுகவின் கொள்கை பாஜகவின் கொள்கைக்கு அப்படியே எதிராக உள்ளது. 7. மாநில சுயாட்சி என்ற கொள்கையை பல மாநிலங்களுக்கு கடத்துகிறது.. இந்த 7 விஷயங்கள்தான் பாஜகவை அச்சுறுத்துவதால் நேரடியாக திமுகவை பாஜகவினர் தாக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications