முட்டை சாப்பிட்டா கேன்சர் வருமா? முட்டைக்குள் ஒளிந்துள்ள நைட்ரோபியூரான்? அதிரடியாக உத்தரவிட்ட FSSAI!
சென்னை: முட்டைகளில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட 'நைட்ரோபியூரான்' எனும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, நாடு முழுவதும் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல முட்டை உற்பத்தி நிறுவனமான 'எகோஸ்' தயாரிப்புகளில், தடை செய்யப்பட்ட 'நைட்ரோபியூரான்' என்ற ஆன்டிபயாடிக் மருந்தின் தடயங்கள் இருப்பதாக, சமூக வலைதளங்களில் ஆய்வக அறிக்கையுடன் வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, தங்கள் முட்டைகள் முழுமையாக ஆன்டிபயாடிக் இல்லாதவை என அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், இந்த தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

'நைட்ரோபியூரான்' என்பது கோழி, பன்றி, இறால் உள்ளிட்ட உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் நோய்தொற்றுகளைத் தடுக்க பயன்படுத்தப்பட்டு வந்த மருந்தாகும். ஆனால் மனிதர்களுக்கு நீண்டகாலத்தில் புற்றுநோய், மரபணு சேதம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த மருந்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உணவு பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து முட்டை உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகளையும் சேகரித்து, அவற்றில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என்பதை பரிசோதித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'எகோஸ்' நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், "எங்கள் பண்ணைகளில் எந்த தடை செய்யப்பட்ட மருந்துகளும் பயன்படுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களில் கூறப்படும் அளவு, FSSAI அனுமதித்த வரம்புக்குள் தான் உள்ளது. அதுவும் தீவனம், நீர் அல்லது சுற்றுப்புற சூழல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். எங்கள் முட்டைகள் பாதுகாப்பானவை" என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பரிசோதிக்கப்பட்ட 124 முட்டை மாதிரிகளில் பெரும்பாலானவை தரமானவையாக இருந்தன. தற்போது எழுந்துள்ள புகாரை தொடர்ந்து அனைத்து நிறுவனங்களின் முட்டைகளும் மீண்டும் சோதிக்கப்படும். ஐந்து நாட்களில் அறிக்கை கிடைக்கும். அரசு தொடர்ந்து கண்காணிப்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம்" என கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு முட்டை வர்த்தகம் நடைபெறுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். உற்பத்தி மையங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி, மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓரிரு வாரங்களில் முடிவுகள் வெளியாகும் என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் கூறினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications