சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இப்படி இருக்கையில் சென்னையில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு வருகின்றன.

சென்னையில் 10ல் 8 பங்குகள் பொதுமான எரிபொருள் இருப்பு இல்லாததால் மூடப்பட்டு வருகின்றன. திறந்திருக்கும் ஒன்றிரண்டு பங்குகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

Fuel Crisis in Chennai

என்ன பிரச்சனை?

ஈரான் போர் காரணமாக, ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்த நீரிணை வழியாகத்தான் வர வேண்டும். இது மூடப்பட்டதால், இந்தியாவுக்கு வர வேண்டிய எண்ணெய் வரவில்லை. எண்ணெய் வந்தால்தான், இங்கு அதை பிரித்து பெட்ரோல், டீசல் ஆக கொடுக்க முடியும். எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சென்னையிலும் இதன் பாதிப்புகள் எதிரொலித்துள்ளன.

சென்னையின் நிலைமை

சென்னையில் மொத்தம் 50 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. இதில் பைக்குகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 40 லட்சம். கார்கள் 8.5 லட்சமும், இதர வாகனங்கள் 1.5 லட்சமும் இருக்கின்றன. வழக்கமாக பைக்குகளில் வேலைக்கு செல்பவர்கள், தினமும் 100-200 ரூபாய்க்கு பெட்ரோல் அடிப்பார்கள். இப்படியாக சென்னையின் ஒரு நாளைக்கான பெட்ரோல், டீசல் தேவை என்பது 45-50 லட்சம் லிட்டர்களாக இருக்கிறது. ஆனால், போர் பதற்றம் காரணமாக ஒரே நேரத்தில் வாகன ஓட்டிகள் டேங்கை முழுமையாக நிரப்ப தொடங்கினர். இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

எரிபொருள் பற்றாக்குறை

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை நிரப்ப முயன்றதால், கையிருப்பு பெட்ரோல் காலியாகியிருக்கிறது. எனவே பங்குகள் மூட தொடங்கியுள்ளன. சென்னையில் 10ல் 8 பங்குகளில் இருப்பு காலியானதால், அவை மூடப்பட்டிருக்கின்றன. மறுபுறம் திறப்பில் உள்ள பங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்டவற்றிலும் இதே நிலைமைதான்.

எப்போது சரியாகும்?

நிலைமை குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கமளித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை. அவற்றின் இருப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் விநியோகச் சங்கிலிகள் சீராக செயல்படுகின்றன" என்று கூறியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளன.

"யாரிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவெடுக்கிறது. இதற்கு ஒரே காரணம் நம் நாட்டை ஆள்பவர்கள் சரணடைந்து விட்டார்கள் என்பதுதான். இந்த அவையில் தற்பொழுது உட்கார்ந்திருக்க கூடிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி எப்ஸ்டீனை தனது நண்பர் என கூறியிருக்கிறார்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+