ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. துரத்துதே ஜிஎஸ்டி! பெட்ரோல் மட்டும் எஸ்கேப்.. பாஜகவுக்கு செக்!
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையும் குறைவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைமுறையாக இருந்தது எனவும், ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 சதவிகிதம் குறைந்திருக்கும் போதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. எந்த பொருளை வாங்கினாலும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து தப்ப முடியாது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையும் குறைவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைமுறையாக இருந்தது. கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்த போது மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியங்களை வழங்கி சுமையை ஏற்றுக் கொண்டது.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சமீபத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 2 கலால் வரி விதித்திருக்கிறது. இந்த கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 11 முதல் 13 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 8 முதல் 10 வரையும் விலை உயர்வு ஏற்படும் என்று கூறப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 19.90 ஆக இருந்து ரூபாய் 21.90 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் கலால் வரி ரூபாய் 15.80 இல் இருந்து ரூபாய் 17.80 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விலை உயர்வை நுகர்வோர் மீது திணிக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. கலால் வரி உயர்வினால் ஒன்றிய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகும் போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது. டீசல் மீதான கலால் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கலால் வரி உயர்வு பெட்ரோலுக்கு 357 சதவிகிதமும், டீசலுக்கு 54 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் வரி பயங்கரவாதத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பெட்ரோல், டீசல் வரி உயர்வினால் மக்கள் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
2014 மே மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூபாய் 9,265. இன்று ரூபாய் 5596 மட்டுமே. அதாவது, 2014 ஆம் ஆண்டை கணக்கிடும் போது கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், 2014 இல் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் விலை ரூபாய் 94.77, ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 87.67 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 சதவிகிதம் குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014 இல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ரூபாய் 39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பியிருக்கிறது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது." என கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications