பெட்ரோல் டீசல் விலையில் 99வது நாளாக மாற்றமில்லை... வெற்றிகரமான 100வது நாள் கொண்டாட தயாராகும் மக்கள்

பெட்ரோல், டீசல் விலை சதமடித்தது என்று சொன்ன காலம் போய் நூறாவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்று சொல்லும் காலம் வந்து விட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரவில்லை. சென்னையில் 99வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளைய தினம் வெற்றிகரமான நூறாவது நாளை வாகன ஓட்டிகள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அரசு குறைப்பு

தமிழக அரசு குறைப்பு

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

தீபாவளி பரிசு

தீபாவளி பரிசு

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெற்றிகரமான 100வது நாள்

வெற்றிகரமான 100வது நாள்

கடந்த 98 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 99வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளைய தினம் வெற்றிகரமான 100வது நாளை கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

 மார்ச் முடிய உயர வாய்ப்பில்லை

மார்ச் முடிய உயர வாய்ப்பில்லை

பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. மார்ச் மாதம் வரைக்குமே பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இதே போல சமையல் கேஸ் விலையும் உயரவில்லை என்பதால் இல்லத்தரசிகளும் நிம்மதியடைந்துள்ளனர். விலையை குறைத்தால் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+