உக்கிரமாகும் உக்ரைன் போர்: அதிகரித்த கச்சா எண்ணெய்..115 வது நாளாக எகிறாத பெட்ரோல் டீசல் விலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 115வது நாளாக எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் பங்கு சந்தைகள், எண்ணெய் வித்துகளின் விலை உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையில் இன்று வரை மாற்றமில்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 114வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

 விலை குறைந்தது

விலை குறைந்தது

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

வெற்றிகரமான 115-வது நாள்

வெற்றிகரமான 115-வது நாள்

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 115வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. மார்ச் மாதம் வரைக்குமே பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அமைந்துள்ளனர். மேலும் உக்ரைன்- ரஷ்யா போரால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 120 டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம், வெள்ளி விலை உடனடியாக உயர்ந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+