பெட்ரோல், டீசல் : மார்ச் வரை விலை உயர வாய்ப்பில்லை ராஜா... காரணம் உங்க எல்லோருக்கும் தெரியுமே

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 90வது நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101 ரூபாய் 40 காசுகள் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுகள் ஆகவும் விற்பனையாகின்றன. ஐந்து மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக நாடு முழுதும் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரிக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்ததை அடுத்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலை குறைப்பு

விலை குறைப்பு

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

கலால் வரி குறைப்பு

கலால் வரி குறைப்பு

கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலால் வரி குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.

90வது நாளாக விலை உயர்வில்லை

90வது நாளாக விலை உயர்வில்லை

கடந்த 90வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சீராக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் வரை விலை உயர வாய்ப்பில்லை

மார்ச் வரை விலை உயர வாய்ப்பில்லை

பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. மார்ச் வரைக்குமே பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+