நிர்மலா சீதாராமன் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை.. இன்றும் மாற்றமில்லை.. 7 நாளாக அதே விலையில் விற்பனை
பெட்ரோல் டீசல் இன்றும் 7வது நாளாக அதே விலையில் விற்பனையாகிறது
சென்னை: 7வது நாளாக இன்றும், பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
அதனை தொடர்ந்து சென்னையில் மறுநாளே அதாவது 22-ம் தேதியே, பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சென்னையில் கடந்த 45 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வந்தது.

அதே விலை இன்றும்
இந்த விலை குறைப்பு கடந்த 22-ந் தேதிதான் குறைந்தது... அதுவரை விலையில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், இந்த திடீர் விலை குறைப்பால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்தனர்.... அப்போதிருந்து இன்றுவரை அதே விலையில் பெட்ரோல் விற்பனையாகிறது.. 7வது நாளாக இன்றும் அதாவது 28 -ம் தேதி, பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

கள்ளக்குறிச்சி
எனினும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.. நேற்றுமுன்தினம், கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயா்வை குறைக்கக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

லெனினிஸ்ட் கட்சி
அதேபோல், நேற்றும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கோவை ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை காந்திசிலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications