பெட்ரோல், டீசல் தொடர்ந்து 7வது நாளாக உயர்வு - கலக்கத்தில் வாகன ஓட்டிகள்

நாடு முழுவதும் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 106.66 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின.

Fuel prices Today November 2, 2021: Petrol, diesel prices hike continues 7th day

கொரோனா 2ஆம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 266 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதற்கு முன்னதாக 1,734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 266 அதிகரித்து 2000.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.106.35 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.102.59 ஆகவும் விற்பனையானது. டெல்லியில் பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.109.69 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.98.42 ஆகவும் விற்பனையானது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.115.50க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.106.62 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. கொல்கத்தாவில் நேற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.35 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.56 க்கும் விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக விற்பனையாகிறது. சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து 106 ரூபாய் 66 பைசாவாகவும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 பைசாவாகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மும்பையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 115 ரூபாய் 85 பைசாவாக விற்பனையாகிறது.1 லிட்டர் டீசல் விலை 106 ரூபாய் 62 பைசாவாகவும் விற்பனையாகிறது. அதே போல கொல்கத்தாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 110 ருபாய் 49 பைசாவாகவும், 1 லிட்டர் டீசல் விலை 101 ரூபாய் 56 பைசாவாகவும், டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 04 பைசாவாகவும், 1 லிட்டர் டீசல் விலை 98 ரூபாய் 42 பைசாவாகவும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+