Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்.. வேகம், கட்டணம்.. சிறப்பு அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயிலான ஏசி மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ஏ.சி. மின்சார ரயிலில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்து 914 பேர் பயணம் செய்யலாம். 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயிலின் சிறப்பு அம்சங்களை நேற்று ஐ.சி.எப். அதிகாரிகள் விவரித்தனர். அதன்படி இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். ஏசி மின்சார ரயிலின் சிறப்பு அம்சங்களை விவரமாக பார்ப்போம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் தான் பல லட்சம் பேருக்கு மலிவான விலையில் நிறைவான போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. மின்சார ரயில்கள் ஒரு நாள் ஓடாமல் போனாலும் செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பித்து விடும். இதேபோல் ஆவடி வழித்தடத்திலும் ரயில்கள் சரியாக ஓடாமல் போனாலும் போக்குவரத்து மொத்தமாக முடங்கி விடும்.

Chennai AC electric train train

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் வாழ்க்கையின் அங்கமாக மின்சார ரயில்கள் உள்ளன. மின்சார ரயில்களை பொறுத்தவரை அதிக அளவு பயணிகள் பயணிக்கிறார்கள்.காலை மற்றும் மாலை வேளைகளில் கால் வைக்கக்கூட இடமே இருக்காது. அவ்வளவு கூட்டம் அலைமோதும். மூச்சு விடுவது கூட சிரமமானதாக இருக்கும்.

கோடை காலத்தில் மின்சார ரயில்களில் பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். தற்போது மெட்ரோ ரயில்கள் ஏசி வசதியுடன் ஓடுவதால், ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

குளிர்சாதன மின்சார புறநகர் ரயில்

அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவு பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம், கடந்த 2019-ம் ஆண்டு தெற்கு ரயில்வே அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது. இதையடுத்து, 2 குளிர்சாதன மின்சார ரெயில்கள் தயாரிக்க சென்னை ஐ.சி.எப்.-க்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது.. தற்போது 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. அடுத்த ரயில் தயாரிக்கும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


110 கிமீ வேகத்தில் ஏசி மின்சார ரயில் செல்லும்

இந்த நிலையில், இந்த ஏ.சி. மின்சார ரயில் செய்தியாளர்களுக்கு நேற்று காண்பிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் ஏ.சி. மின்சார ரயிலின் சிறப்பம்சங்களை ஐ.சி.எப். அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதிகாரிகள் கூறிய தகவலின் படி, இந்த ஏ.சி. மின்சார ரயில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ஏசி மின்சார ரயிலில் சிசிடிவி கேமராக்கள்

முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டி வரையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் இடம் பெற்றுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் உள்ளன. மெட்ரோ ரயில் பெட்டிகளை விட அதிக பயணிகளை சுமந்து செல்லும் இடவசதிகள் இருக்கிறது. இதில் ஒரே நேரத்தில் அமர்ந்தபடி 1,116 பேர், நின்று கொண்டு 3 ஆயிரத்து 798 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 914 பேர் பயணிக்க முடியும். அதேபோல் பயணிகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் அறிவிப்பு பலகைகள் இருக்கிறது.


பெண்களுக்கு முதல் மற்றும் கடைசி பெட்டி

புதிய ஏ.சி. மின்சார ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் இடையே இருந்து வரும் சத்தத்திற்கு ஏற்ப ஒலிபெருக்கியின் சத்தம் தானாக அதிகரிக்கும் வகையில் இருக்கிறது. இதன் மூலம் ரயிலில் வரக்கூடிய அனைத்து தகவல்களையும் பயணிகள் மிகவும் எளிதாக கேட்கலாம். முதல் மற்றும் கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.


கவாச் தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் பெட்டிகளை போல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ரயிலில் பயணிகள் படிக்கட்டில் நின்று பயணிக்க இயலாது. விபத்துகளை தடுப்பதற்காக 'கவாச்' தொழில்நுட்பமும் இந்த ரயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏசி மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. ஒரு வாரத்திற்குள் ஏ.சி. மின்சார ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்க ஐ.சி.எப். அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


ஏசி மின்சார ரயிலில் கட்டணம் எவ்வளவு

சென்னையில் ஏ.சி. மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகிறது. இதற்கான கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லவே 70 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என் தகவல்கள் பரவுகின்றன.ஆனால் கட்டணம் குறித்து தெற்கு ரயில்வே முறைப்படி அறிவிக்கும்.. அதன்பிறகே கட்டணம் குறித்து தெரியவரும். அதேநேரம் ஏசி மின்சார ரயில் கட்டணம், மெட்ரோ கட்டணத்தைவிட அதிகமாக இருக்குமா என்ற அச்சமும் உள்ளது. இதனிடையே புதிய ஏ.சி. மின்சார ரயில் கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட அனைத்து வழித்தடத்திலும் புதிய நேர அட்டவணைபடி சுழற்சி முறையில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+