சென்னையில் எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்? முழு விவரம்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக மொத்தமாக 1,314 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் பயணிக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதன்பின் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று வருவதால் ஜன.11ஆம் தேதியான இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் பொங்கல் பண்டிகையுடன், இரு முறை சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் வருகிறது.

அதேபோல் வெள்ளிக் கிழமையான 17ஆம் தேதி அரசு தரப்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் இருந்து மட்டும் 1.87 லட்சம் பேர் பேருந்து மூலம் சொந்த ஊர் பயணித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளை விடவும் இம்முறை அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 1,314 சிறப்பு பேருந்துகள் மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதன்படி புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கமாக பயணிக்கும் மக்களுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை மார்க்கமாக பயணிப்போருக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் திருநெல்வேலி மார்க்கமாக செல்வோருக்கும் சேலம், கோவை மார்க்கமாக செல்வோருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம், தஞ்சை மார்க்கமாக செல்வோருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்கக்மாக செல்வோருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஈசிஆர், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்வோருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்வோர் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications