குரங்குன்னு மனைவியை கிண்டலடித்த ஆட்டோ டிரைவர்..மறு நொடி ஜன்னலில் எட்டி பார்த்தால்? யாரந்த மாடல் அழகி
சென்னை: வார்த்தைகள் ஒருவரின் மனதை எவ்வளவு ஆழமாக பாதிக்க முடியும் என்பதற்கும், குடும்பத்துக்குள் ஏற்படும் சின்ன சின்ன அவமதிப்புகள்கூட உயிரை பறிக்கும் அளவுக்கு செல்லக்கூடும் என்பதற்கும் நேற்று நடந்த 2 சம்பவங்கள் உதாரணமாக விளங்கி கொண்டிருக்கின்றன.. சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி தனு சிங்,.. இவர் 4 வருடங்களுக்கு முன்பு ராகுல் சீனிவஸ்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ராகுல் ஆட்டோ டிரைவர்
ராகுல் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..,. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.. இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை உறவினர் வீட்டு விசேஷத்திற்கு தம்பதி இருவரும் சென்றுள்ளனர்.. விசேஷம் முடிந்து திரும்பியபோது, தனு சிங்கின் தங்கை அஞ்சலியும் தன்னுடைய அக்காவுடன் வீட்டுக்கு வந்துவிட்டார்..
அன்றைய தினம் இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ராகுல் தனது மனைவியை "குரங்கு" என்று கூப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்... தங்கை முன்னிலையில் கணவர் தன்னை இப்படி உருவக்கேலி செய்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கும், மன வேதனைக்கும் தனு சிங் ஆளானார்..
கணவர் சொன்ன குரங்கு
கணவர் தன்னை குரங்கு என்று கூப்பிட்டதுமே, யாரிடமும் பேசாமல் அமைதியாக ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்...
ஆனால் இது எதுவுமே அறியாத ராகுல், நைட் அனைவரும் சாப்பிடுவதற்காக சாப்பாடு வாங்க ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.. அந்த நேரத்தில் தனு சிங் தன்னுடைய ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்... சிறிது நேரத்தில் சாப்பாடு பார்சலுடன் வீடு திரும்பிய ராகுல், தனு சிங் ரூம் கதவை தட்டி, சாப்பிட கூப்பிட்டார்..
ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, தனு சிங் சடலமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்... உடனே போலீசாருக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபேஷியல் முகம்
இதேபோன்ற இன்னொரு துயர சம்பவம் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த விளம்பர மாடல் அழகியான பிரியங்கா, தனது கணவர் ரவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரியங்கா தன்னுடைய முகத்தில் "பேஷியல்" செய்திருந்தார். அதைப் பார்த்த ரவி, "குரங்கு மாதிரி இருக்கே முகம்" என்று விளையாட்டாக பேசியிருக்கிறார்..
மாடலிங் துறையில் ஆர்வத்துடன் இருந்த பிரியங்காவிற்கு, தனது கணவர் தன்னுடைய அழகை கேலி செய்தது பெரும் மன உளைச்சலைத் தந்தது. அந்த வேதனையிலேயே அவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மனித உணர்வுகள்
இந்த இரு சம்பவங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான்.. ஒரே வார்த்தையை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதமாகும்.. விளையாட்டு என்றாலும், உரிமை என்றாலும், கிண்டல் என்றாலும், குடும்ப உறவுகளுக்குள் பேசப்படும் வார்த்தைகள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன..
நாம் எப்படி பேசினாலும், சம்பந்தப்பட்ட நபரின் மனநிலையையும் அறிந்தே பேச வேண்டியிருக்கிறது... அத்துடன் ஒருவரின் சுயமரியாதையை சிதைக்கும் செயலாகவும் இருந்துவிடக்கூடாது என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது...!!












Click it and Unblock the Notifications