Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப் லீடர்ஸ் வரப்போறாங்க.. களமிறங்கிய தலைமை செயலாளர் மீனா.. பரபரப்பு மீட்டிங்.. என்ன பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள ஜி 20 ஆலோசனை கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.

ஜி 20 நாடுகள் என்பது உலகின் சக்தி வாய்ந்த, வளர்ந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ கூட்ட‌மைப்புதான் ஜி 20 ஆகும்.

இதற்கு தலைவராக உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் பதவி வகிக்கும். 2022ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்தோனேசியாவிடம் இருந்த தலைவர் பதவி சுழற்சி முறையில் இந்தியாவிடம் வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டில் முதல் முறையாக ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டைக் இந்தியா கூட்டவுள்ளது.

G 20 meeting in Chennai: Tamil Nadu Chief Secretary Shivdas Meena holds an important discussion

இதற்கு முன்பாக பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அதிகாரிகள் பலர் வருகை தர இருக்கின்றனர். இந்நிலையில் ஜி-20 மாநாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் சென்னையில் 24.7.23 முதல் 26.7.23 வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி- 20 விளங்கி வருகிறது. அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சனைகளிலும், உலகளாவிய கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வடிவமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் ஜி-20 முக்கிய பங்கு வகிக்கிறது. 1.12.2022 முதல் 30.11.2023 வரை நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

இந்தியாவின் தலைமையில் ஜி-20ல் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிக்குழுவின் மூன்று கூட்டங்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நகரங்களில் நடத்திட திட்டமிடப்பட்டு, அவற்றில் இரண்டு கூட்டங்கள் காந்திநகர் மற்றும் மும்பையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (5.07.2023) தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலர்கள் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாட்டில் 24.7.2023 முதல் 26.7.2023 வரை நடைபெறவுள்ள பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட அனைத்து முன்னேற்பாட்டு பணிகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ளுமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் திரு. கமல் கிஷோர், உறுப்பினர், திரு. ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் திருமதி. மிர்நாளினி ஸ்ரீவாஸ்த்தவா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் (தணிப்பு) திரு. கலோனல் கீர்த்தி பிரதாப் சிங், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.குமார் ஜயந்த், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.ஏ. ராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு. த. மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+