BREAKING NEWS LIVE: புயல் பாதித்த இடங்களில் அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    7 மாவட்டங்களில் பாதிப்பு | சிலர் பலி | ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது- வீடியோ

    சென்னை: கஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையை கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.

    live

    Nov 17, 2018, 12:57 pm IST

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

    நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுகிறது

    Nov 17, 2018, 12:56 pm IST

    சென்னை முழுவதும் மழை பெய்கிறது

    நின்று நிதானமாக பெய்கிறது மழை

    காற்று இல்லாமல் இடியுடன் மழை பெய்கிறது

    Nov 16, 2018, 6:05 pm IST

    தமிழகத்திலிருந்து கேரள எல்லைக்குள் நுழைந்தது கஜா

    ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக கேரளாவிற்குள் புகுந்தது

    கஜா தாக்கத்தால், இடுக்கி மாவட்டத்தில் கன மழை

    Nov 16, 2018, 4:31 pm IST

    கஜா புயல்: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

    தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 28 பேர் பலி

    Nov 16, 2018, 4:25 pm IST

    தனித்தீவானது வேதாரண்யம்

    சாலை இணைப்பு முழுக்க துண்டிப்பு

    பிற ஊர்களில் இருந்து வேதாரண்யம் செல்ல 6 மணி நேரம் ஆகிறது

    புயல், மழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தன

    மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் சேதமடைந்ததால் கலக்கம்

    கூடுதலாக பேரிடர் மீட்பு படையினர் விரைய வேண்டும் என மக்கள் கண்ணீர்

    உணவு, மருத்துவ உதவி கேட்டு கூக்குரலிடும் வேதாரண்யம் மக்கள்

    Nov 16, 2018, 4:05 pm IST

    கஜா தாக்குதலை முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி - கமல்ஹாசன்

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது - கமல்ஹாசன்

    அரசு அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் - கமல்ஹாசன்

    Nov 16, 2018, 2:19 pm IST

    கஜா புயல்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

    தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 23 பேர் பலி

    Nov 16, 2018, 1:49 pm IST

    கஜா புயல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

    கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க 20 பேர் பலி

    தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 20 பேர் பலி

    Nov 16, 2018, 1:27 pm IST

    கஜா புயலால் வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்

    புதிதாக நிறுவப்பட்ட ஏசுநாதர் சிலை உடைந்தது

    Nov 16, 2018, 1:13 pm IST

    அரசை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - உதயகுமார்

    ஊடகங்களுக்கு நன்றி, ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது - உதயகுமார்

    பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

    Nov 16, 2018, 1:04 pm IST

    புயல் பாதிப்பை முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத்சிங்

    தேவைப்படும் உதவிகளை செய்ய மத்திய அரசு உறுதி

    Nov 16, 2018, 11:53 am IST

    கஜா புயல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

    கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க 15 பேர் பலி

    தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி

    திருவாரூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

    Nov 16, 2018, 11:51 am IST

    கஜா புயல் வலு குறைந்து திண்டுக்கல் அருகே நிலை கொண்டுள்ளது - பாலச்சந்திரன்

    மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் கன, மிக கன மழைக்கு வாய்ப்பு

    மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்

    தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் 18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்

    19, 20 தேதிகளில் இது தென் மேற்கு கடலில் நிலவும்

    அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகம், புதுச்சேரியில் 25 செமீ மழை பதிவாகியுள்ளது

    இதே காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 29 செமீ ஆகும்

    Nov 16, 2018, 11:37 am IST

    அரசுடன் திமுகவினரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் - ஸ்டாலின்

    திமுகவினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - ஸ்டாலின்

    Nov 16, 2018, 11:32 am IST

    கஜா புயல் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு
    Nov 16, 2018, 11:31 am IST

    சிவகங்கையில் மரம் முறிந்து அரசு ஊழியர் முத்து முருகன் பலி

    சிவகங்கையில் மரம் விழுந்து எலிசபெத் ராணி என்ற பெண் பலி

    பண்ருட்டி அருகே மரம் விழுந்து ரங்கநாதன் என்பவர் பலி

    Nov 16, 2018, 11:28 am IST

    கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க 13 பேர் பலி

    தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலி

    பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

    தஞ்சை அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை பலி

    கடலூரில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பலி

    கடலூரில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் பலி

    திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சுவர் இடிந்து பலி

    Nov 16, 2018, 11:04 am IST

    புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும்- முதல்வர்

    போர்க்கால அடிப்படையில் பாதிப்புகள் சரி செய்யப்படும் - முதல்வர் பேட்டி

    நேரில் போய்ப் பார்வையிட்ட பிறகுதான் உண்மையான சேத விவரம் தெரிய வரும்- முதல்வர்

    முழுமையான விவரம் கிடைத்ததும் மத்திய அரசின் உதவி கோரப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    Nov 16, 2018, 11:04 am IST

    புயல் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்

    படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம்

    சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால் ரூ.25 ஆயிரம்: முதல்வர்

    Nov 16, 2018, 11:03 am IST

    அமைச்சர் உதயக்குமார் இரவு பகலாக செயலாற்றினார் - முதல்வர் பாராட்டு

    புயல் அடங்கியதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவேன் - முதல்வர்

    Nov 16, 2018, 11:01 am IST

    இதுவரை கஜா புயலுக்கு 11 பேர் இறந்துள்ளதாக கலெக்டர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது - முதல்வர்

    அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் 3 நாட்களுக்கு முன்பே மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் - முதல்வர்

    Nov 16, 2018, 10:59 am IST

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் பழனிச்சாமி
    Nov 16, 2018, 10:58 am IST

    82,000 பேர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - முதல்வர்

    சேதம் குறித்த ஆய்வுப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன - முதல்வர்

    அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்ப்பு - முதல்வர்

    Nov 16, 2018, 10:57 am IST

    கஜா புயல் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

    நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரும் சேதம் - முதல்வர்

    Nov 16, 2018, 10:25 am IST

    கஜா தீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது - வானிலை மையம்

    புயலாக வலு குறைந்துள்ளதால் கன மழை, மிக கன மழையை எதிர்பார்க்கலாம்

    அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

    கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினத்தில் தலா 17 செமீ மழை பெய்துள்ளது

    Nov 16, 2018, 10:25 am IST

    பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தலா 16 செமீ மழை பெய்துள்ளது

    நெய்வேலி 14 செமீ, விருத்தாச்சலம், செங்கல்பட்டு தலா 12 செமீ மழை பெய்துள்ளது

    காஞ்சிபுரம், சென்னையில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது

    தாம்பரத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது - வானிலை மையம்

    கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்துள்ளது

    Nov 16, 2018, 10:22 am IST

    திண்டுக்கல் அருகே புயலாக மையம் கொண்டுள்ளது கஜா- வானிலை ஆய்வு மைய இயக்குநர்

    3 மணி நேரத்தில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

    Nov 16, 2018, 10:20 am IST

    கொடைக்கானலில் நள்ளிரவிலிருந்து கன மழை கொட்டுகிறது

    பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு நிலை பாதிப்பு

    பழனி சாலை, வத்தலகுண்டு சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு

    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வெளியில் வர முடியாமல் தவிப்பு

    கொடைக்கானல் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

    இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அவஸ்தை

    Nov 16, 2018, 9:51 am IST

    தஞ்சையில் முடங்கியது தொலைபேசி சேவை

    கஜா புயலால் தொலைபேசி சேவை பாதிப்பு

    மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிப்பு

    ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100ஐ அழைக்கலாம்

    Nov 16, 2018, 9:37 am IST

    11 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கஜா புயல் மாறும்
    READ MORE

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+