கஜா புயலுக்கு இடையிலும் சாட்டிலைட் அனுப்பும் இஸ்ரோ.. ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் ஜிஎஸ்எல்வி!
கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது.
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப இருக்கிறது.
சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி தற்போது புயலாக மாறி உள்ளது. சென்னை மட்டுமில்லாமல் கடலூர், நாகையிலும், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட பகுதியிலும் அதிக அளவில் மழை பெய்யும்.

என்ன சாட்டிலைட்
இந்த நிலையில் இஸ்ரோ வரும் நவம்பர் 14ம் தேதி விண்ணில் செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவ இருக்கிறது. 7 மாதங்களுக்கும் பின் இப்போதுதான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

புயல் வருகிறது
ஆனால் அதற்கு மறுநாள்தான் அதாவது 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் அடிக்க உள்ளது. இதனால் 14ம் தேதி காலையில் இருந்தே பெரிய அளவில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 16ம் தேதி மாலை வரை இந்த புயலால் மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

பெரிய குழப்பம்
இதனால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் வந்தது. ராக்கெட் ஏவுவதற்கு சரியான சூழ்நிலை நிலவுமா என்று கேள்விகள் எழுந்தது. முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா அருகே அதிக அளவில் காற்று வீசும் என்று வானிலை மையமும் கூறியதால் இந்த சந்தேகம் வலுவடைந்தது.

கண்டிப்பாக நடக்கும்
இந்த நிலையில், திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மார்க் 3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும். 3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications