சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல்: தமிழகம் விரைந்தது பேரிடர் மீட்பு படை.. சென்னை, கடலூரில் களமிறங்கிய வீரர்கள் !

கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படையினர் தமிழகத்திற்கு விரைந்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்-வீடியோ

    சென்னை: கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படையினர் தமிழகத்திற்கு விரைந்து இருக்கிறார்கள்.

    கஜா புயல், இன்று தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே செல்கிறது.

    இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யும். கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி தற்போது புயலாக மாறி உள்ளது.

    [கஜா புயல்.. சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட்]

    சென்னை தப்பித்தது

    சென்னை தப்பித்தது

    இந்த புயல் முன் சென்னை கடலூர் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த புயல் 15ம் தேதி அன்று கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இதனால் சென்னைக்கு பெரும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டு இருக்கிறது.

    பெரிய மழை

    பெரிய மழை

    சென்னை மட்டுமில்லாமல் கடலூர், நாகையிலும் அதிக அளவில் மழை பெய்யும். நவம்பர் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் மொத்தம் 120-140 கிலோ மீட்டர் வேகம் வரை அடைய வாய்ப்புள்ளது. அப்படி காற்று வீசும்பட்சத்தில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

    களமிறங்கினார்கள்

    களமிறங்கினார்கள்

    கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படையினர் தமிழகத்திற்கு விரைந்து இருக்கிறார்கள். சென்னை, கடலூர் மற்றும் ராமேஸ்வரத்திற்கு மூன்று கட்டமாக வீரர்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். நாளை இன்னும் அதிக மீட்பு படையினர் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசும் பணியாளர்களை நியமித்து இருக்கிறார்கள்.

    English summary
    Gaja Storm: National Disaster Management Force reaches TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X