கஜா புயல்.. சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட்
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயலால் சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் 7 மாவட்டங்கள் தமிழகத்தில் புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயல் தற்போது தற்போது தமிழகத்தை நோக்கி நகரத்து வருகிறது. தற்போது இந்த புயல் நாகையில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது.
இந்த புயல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 15 தேதி காலையில் இருந்து இந்த புயலின் தாக்கம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
[கஜா புயல்: தமிழகம் விரைந்தது பேரிடர் மீட்பு படை.. சென்னை, கடலூரில் களமிறங்கிய வீரர்கள் !]

இன்று மாறும்
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும் புயல் இன்று வேகம் எடுக்கும். வரும் 15ம் தேதி மாலை இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

எங்கு கடக்கும்
இந்த காஜா புயல் முதலில் சென்னையை நோக்கி வந்தது. ஆனால் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மாற்றம் காரணமாக இந்த புயல் திசை மாறியது. கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது.

சென்னைக்கு பிரச்சனை
இந்த புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை. சென்னையில் புயலின் பாதிப்புகள் இருக்காது. ஆனால் நாளையில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

எங்கு பாதிப்பு
விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், இராமேஸ்வரம் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். இங்குதான் புயல் பாதிப்புகள் அதிகமாக இருக்கு. தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications