கஜா புயல் நடவடிக்கை.. தமிழக அரசு நன்றாக செயல்பட்டுள்ளது.. ஸ்டாலின் பாராட்டு!
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது, கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிகவும் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. இது பல தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கஜா புயல் குறித்த கருத்து தெரிவிக்காமலிருந்த திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. தமிழக அரசு முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்! அரசுடன் திமுகவினரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். வேறுபாடு பார்க்காமல் எல்லோரும் சேர்ந்து பணி செய்ய வேண்டும். திமுகவினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications