போகும் வழியெங்கும் கன மழையைக் கொடுக்கும் கஜா.. வெதர்மேன் சொல்வதை கவனிங்க
Recommended Video

சென்னை: தமிழகத்தை உலுக்கி எடுத்த கஜா புயலானது அடுத்தடுத்து கன மழையைக் கொடுத்து விட்டு மாலையில் கேரளாவுக்குள் புகுந்து பின்னர் அரபிக் கடலுக்கு இடம் பெயரவுள்ளது. அது போகும் வழியெங்கும் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
கஜா புயலின் நகர்வு குறித்து அவர் விரிவாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் கன மழையைக் கொடுத்து விட்டே கஜா புயல் அரபிக் கடலுக்கு இடம் பெயரும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு:

புயல் காற்றின் தாக்கம்
புதுக்கோட்டை, சிவகங்கையின் வடபகுதிகள், திருச்சியின் தென் பகுதி, கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகள், திண்டுக்கல், மதுரையின் வடபகுதி, தேனியின் பல்வேறு பகுதிகளில் கஜா புயல் காற்றின் தாக்கம் இருக்கும். இந்த மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் இருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

கொடைக்கானலில் பலத்த காற்று
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும். கொடைக்கானல் பகுதியில் பலமான காற்றும், கனமழையும் பெய்யும் என்பதால், அங்கு தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும். வெளியே வர வேண்டாம்.

மழை பெறும் பகுதிகள்
திருச்சி , கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள், வால்பாறையின் சில பகுதிகள், விருதுநகரின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதி ஆகியவற்றில் இன்று கனமழை பெய்யக்கூடும். இன்று மாலைக்குப் பின் கஜா புயல் கேரளா பகுதிக்குள் நுழைந்துவிடும்.

கேரளாவில் கன மழை
இடுக்கி மாவட்டத்தில் கஜா புயலால் கனமழை இருக்கும். விடுமுறை காலத்தில் மூணாறு நகரம் வந்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். குறைந்த நேரத்தில் அதிகமான மழை பொழிவு இருக்கும் என்பதால், இடுக்கி மாவட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும். கஜா புயல் நகரும் பகுதிகளில் எல்லாம் தொடர் மழை இருக்கும்.

சென்னைக்கும் உண்டு
சென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும். அதேசமயம், அடுத்தவாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நன்றி: https://www.facebook.com/tamilnaduweatherman/posts/2399958990231371
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications