"மெரினாவில் காந்தி சிலையை காணோமே.." வாக்கிங் சென்ற சென்னைவாசிகளுக்கு ஒரே குழப்பம்! என்னாச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று காலை வாக்கிங் சென்றவர்கள் மெரினா கடற்கரையில் காந்தி சிலை வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2015 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்போது தலைநகர் சென்னையில் நீல மற்றும் பச்சை என்று இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை நீல வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயங்கி வருகிறது.

சென்னை
இந்த இரு வழித்தடங்களில் 40+ மெட்ரோ நிலையங்கள் இருக்கிறது. பெட்ரோல் விலை ஏற்றம், போக்குவரத்து நெரிசல், வானிலை என்று பல காரணங்களால் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோ
மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என்று 3 வழித்தடங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நகரில் இப்போது பல்வேறு பகுதிகளில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது.

இடமாற்றம்
இதற்குத் தமிழக அரசும் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இப்போது சென்னை மெரினாவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காந்தி சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ கட்டுமான பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அது பழைய இடத்திலேயே வைக்கப்பட உள்ளது.

எங்கே
ராட்சத இயந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடக்கும் போது, காந்தி சிலை சேதமடையக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதே சர்வீர்ஸ சாலையில் 15 முதல் 20 அடி தொலைவில் கட்டுமானத்தால் காந்தி சிலை பாதிக்கப்படாத இடத்தில் இந்த சிலையை வைத்துள்ளனர். இன்று காலை வழக்கம் போல பீச்சுக்கு வாக்கிங் சென்றோர் வழக்கமாகக் காந்தி சிலை இருக்கும் இடத்தில் அது இல்லாததால் குழப்பமடைந்தனர்.

சென்னைவாசிகள்
அதன் பின்னரே, என்ன விஷயம் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். மெட்ரோ ரயில் கட்டுமானம் இப்போது சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ கட்டுமானம் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட மெட்ரோ வரும் 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications