விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.. தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு.. ஒரே ஆண்டில் நடந்த மாற்றம்!
சென்னை: விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்துக் கூறாத போது, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பின. தற்போது மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு முடிவடைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக எப்போதும் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட எந்த இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளை பதிவு செய்யாது. அது திமுகவின் கொள்கை முடிவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய விஜய்யும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதை தவிர்த்தார்.
இதனால் பாஜக தரப்பில் தவெக தலைவர் விஜய்க்கு கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இதன்பின் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேசுகையில், தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியார் இருந்தாலும், அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்று அறிவித்தார். தற்போது 2வது மாநில மாநாடு மதுரையில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்துக்கு வாழ்த்துக் கூறாத நிலையில், ஒரே ஆண்டில் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் விஜய்யின் இந்த நிலைப்பாட்டிற்கு பின்னணியில் வேறொரு காரணமும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை குறி வைத்தே விஜய் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் திமுக பாணியில் அல்லாமல் அதிமுக பாணியில் அரசியல் செய்வதை விஜய் மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
-
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications