Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கங்கை அமரன்" யாரை சொல்றாரு தெரியுதா.. "ரொம்ப மேல ஏறபோறார்.. லஞ்ச பெருச்சாளியை கண்ணால கட்டி போடுவாரு

கங்கை அமரன் அண்ணாமலைக்காக தெம்மாங்கு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் 2023 -ம் ஆண்டுக்கான பாடல் ஒன்றினை, திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனரும், பாடகரும், பாடலாசிரியருமான, கங்கை அமரன் எழுதி பாடியுள்ளார்.. அந்த பாடல்தான், இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.

பாஜகவில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுவதாக கங்கை அமரன் பலமுறை கூறியிருக்கிறார்.. அன்று, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பாஜக சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்..

அப்போது செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசியபோது, பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தது.. பாஜகவில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.. தமிழகத்தில் பாஜகவின் எழுச்சிக்கான ஆரம்பம் இது என்று பூரித்து கூறியிருந்தார்.

பஞ்சம் பசி

பஞ்சம் பசி

இதற்கு பிறகு., பல பாஜக நிகழ்ச்சிகளிலும் கங்கை அமரன் தொடர்ந்து பங்கேற்றபடியே வருகிறார்.. கடந்த வருடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 92-வது பிறந்தநாள் விழாவில், கங்கை அமரன் பேசியிருந்தது இணையத்தில் வைரலாகியிருந்தது.. "முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பிரபலமாவதற்கு தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், மதுரை பகுதியில் பாவலர் வரதராஜனும் தான் முக்கிய காரணமாகும். உழைக்கும் மக்களின் விஷயங்கள், பஞ்சங்கள், பசியை பற்றி பாடி பிரபலப்படுத்தியவர்கள் அவர்கள்தான். அதற்கு பிறகு தான் விவசாய சங்கங்கள் எல்லாம் உருவானது.

அண்ணன் இளையராஜா

அண்ணன் இளையராஜா

அண்ணனை காப்பாற்ற வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் எனது அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. ஒருத்தர் கூட அண்ணனை காப்பாற்றவில்லை. அதன்பிறகு எங்கள் குடும்பத்தில் அரசியலில் யாரும் இல்லை. இப்போது கட்சியில் இருக்கும் ஒரு ஆள் நான்தான்

பெரிய ப்ளஸ்

பெரிய ப்ளஸ்

பாஜகவுக்கு பெரிய பிளஸ் என்னவென்றால் கடவுள் உண்டு என்பதுதான். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சுற்றுகின்ற, சாமி சிலைகளை அவமதிக்கின்ற ஆட்கள் பாஜகவில் கிடையாது. தெய்வத்தை நம்பி வாழ்பவர்கள் நாம். தெய்வத்தை நம்பினோர் கைவிடப் படமாட்டார்கள். என்று கங்கை அமரன் பேசியிருந்தது பலரையும் கவனிக்க வைத்தது.. இதற்கு பிறகுதான், அம்பேத்கருடன் மோடியை இளையராஜா, ஒப்பிட்ட விவகாரத்தில், கங்கை அமரனின் பேச்சுகள் மீண்டும் மீடியாவை வட்டமடித்தன..

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

ஒரு சேனலுக்கு இதுகுறித்து கங்கை அமரன் பேட்டி அளித்தபோது சற்று எமோஷனல் ஆகி பேசியிருந்தார்.. "அண்ணாதுரைக்கு நா கதை எழுதிக்கொடுத்து அவர் வெளியிடுகிறார் என்று சொன்னால், அவருக்கு அசிங்கம் இல்ல? கலைஞர் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறார்? கண்ணதாசன் எத்தனை பாட்டு எழுதியிருக்கிறார்? எல்லாதையும் கங்கை அமரன் எழுதிக்கொடுத்தாருனு சொன்னா அசிங்கம் இல்லை? யார் யார் பெயரில் வருவதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

அறிவே இல்லாத நாய்

அறிவே இல்லாத நாய்

அத்துடன், நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கோப்பட்ட கங்கைஅமரன், திடீரென யோவ்... பொறுய்யா... பொறுய்யா.. ஆமா நான் தான் எழுதினேன். நீ என்ன பண்ணுவ? அப்படி பேசுறவன் எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இல்லாத நாய் என்று ஆவேசமாக சீறியிருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.. அந்த பாடலை தெம்மாங்கு பாணியில் எழுதி பாடி இருக்கிறார்.. இந்த பாடலுக்கு இசையமைத்து இருப்பவர் ஜித். இதனை, தயாரித்து வெளியிட்டு இருப்பவர் கோயம்புத்தூர் பாஜக மாநகர் மாவட்ட துணை தலைவர் தேவராஜ் பழனிசாமி ஆவார். தமிழக பாஜகவின் 2023 -ம் ஆண்டுக்கான பாடலாக, அது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..

வந்துட்டதய்யா

வந்துட்டதய்யா

அந்த பாட்டுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கை அமரசன் எழுதிய அந்த பாடல் வரிகள் இதுதான்: "வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு எட்டு திசையும் எட்டி சுத்தி வரும் தேரு.. ஏழைக்கும் பாழைக்கும் நாளைக்கு நல்லது வரும் ஊருக்கும் நாட்டுக்கும் உண்மையிலே நம்பிக்கை தரும் கூட்டமெல்லாம் சேர்ந்து அவர கும்பிடுது பாரு.. கோடி நலம் காட்டும் சக்தி உள்ள ஆளு.. நம்மவரு தான் நாளை வரும்போது இவரு மேல இருப்பாரு என் சொல்லு பலிக்கும் அது ஜெயிக்கும் கூடாத கூட்டம் கூடி வரும் பாரு... வாங்காத பேரு வாங்கி வந்தார் பாரு.. இனி ரொம்ப மேல ஏறப் போறார் பாரு.. லஞ்ச பெருச்சாளி சுத்தி வரும்போது கண்ணால பாத்தே இவர் கட்டிப் போடுவாரு.. இனி மேல நல்ல காலம் இப்ப வந்துட்டதய்யா நமக்காக அவர் இருப்பார் ரொம்ப நல்ல படியா நல்லபடியா" என்று அந்த வரிகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+