மயிலாப்பூரில் பயங்கரம்.. பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை! பகீர்
சென்னை: தலைநகர் சென்னையில் பிரபல ரவுடியான டொக்கன் ராஜா என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா. இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.
சென்னையில் உள்ள மற்றொரு பிரபல ரவுடியான சிடி ரவி என்பவருக்கு இவர் வலது கரமாகச் செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீண்டு பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இவரை ஏற்கனவே போலீசார் நீண்ட நாட்களாகத் தேடி வந்தனர்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அப்போது அவர் ஜாமீன் பெற்றுக்கொண்டு பின்னர் மீண்டும் தலைமறைவானார். இந்தச் சூழலில் தான் அவரை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் மீண்டும் கைது செய்திருந்தது. இருப்பினும் அதன் பிறகு சில காலத்திலேயே இவர் வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே பாஜகவில் சேர்ந்த டொக்கன் ரவிக்கு வடசென்னை பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியான டொக்கன் ராஜா கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இவரை மர்ம கும்பல் வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவர் மயிலாப்பூர் குமரன் நகர்ப் பகுதி சேர்ந்தவர் ஆவார். இவர் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியா ஆவர். சென்னையில் இருக்கும் பல போலீஸ் நிலையங்களில் இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல், இவரைப் பட்டாக்கத்திகளைக் கொண்டு சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ரவுடி ராஜா அப்படியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாப்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இப்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் சென்னையில் அரங்கேறிய இந்த படுகொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications